நீதியரசர் ஜீ.ஜீ வீரமந்திரியின் மறைவுக்கு எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் அனுதாபம்

ண்மையில் மறைந்த சர்வதேச நீதிமன்றத்தின் உபதலைவர் நீதியரசர் ஜீ.ஜீ வீரமந்திரியின் மறைவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் அனுதாபம் தெரிவிக்கிறார்.

இலங்கையின் புகழ் பூத்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.ஜீ.ஜீ வீரமந்திரி அவர்கள் அண்மையில் காலமானதையிட்டு எங்கள் அனுதாபத்தை அவரின் குடும்பத்திற்கும் உறவினருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக 1948ம் ஆண்டு பதவியேற்றவராவார். அதன் பின்பு 1967ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டு வரை இலங்கை உயர் நீதி மன்றத்தின் நீதிஅரசராக கடமையாற்றிய இவர் தனது 90 வயதில் காலமானது இந் நாட்டிற்கும் உலக நீதித்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.

நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக 1991ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை கடமையாற்றி பின்பு உயர் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் உபதலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அவுஸ்ரேலியாவின் மெல்பெனிலுள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமான மொனாஸ் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் அணு ஆயுதங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களில் சர்வதேச சங்கத்தின் தலைவருமாவார்.

1926ம் ஆண்டு 17ம் திகதி பிறந்த வீரமந்திரி அவர்கள் றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெறும் எல்லா பாடவிதானங்களில் அன்னாரின் பெயர் அடிக்கடி அவ்வப்போது எல்லா விரிவுரையாளர்களாலும் எப்பொழுதும் ஞாபகம் ஊட்டப்படுகின்ற ஒருவராகவும் அன்னாரின் வழக்கின் தீர்ப்புகள் இன்றும் எல்லா நீதிமன்றங்களிலும் எப்பொழுதும்; எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் டுடுடீஇ டுடுனு பட்டங்களை பெற்ற இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைகளில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று புகழ் பூத்து புடம் போட்ட ஒரு சட்ட மாணவர் ஆகவும் திகழ்ந்துள்ளார்.
 முஸ்லிம் சட்டம் சம்பந்தமான பல வழக்குகளின் தொகுப்பு குறிப்பிடக்கூடிய அன்னாரின் அளப்பரிய பங்களிப்பாகும். இப்பேற்பட்ட சட்ட மேதையுடன் ஒரு சர்வதேச சட்ட மகாநாட்டில் நானும் கலந்துகொண்ட போது அன்னாருடன் இணைந்து எடுக்கப்பட்ட இப் புகைப்படத்தில் அடியேன் இருப்பதை பெரும் பாக்கியமாக கொள்கிறேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -