அ.இ.ம.காங்கிரசுக்கு வாக்களித்த கல்முனை மக்களுக்கு என்ன கைமாறு செய்தீர்கள்..



சபா ரௌஸ் கரீம் கல்முனை-
ம்பி வாக்களித்த கல்முனை மக்களுக்கு அ.இ.ம.கா தலைமை செய்யப்போகும் கைம்மாறு என்ன?
கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான கல்முனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் குதித்து பகல், இரவு பாராமல் வேலை செய்து ஆயிரக்கணக்காக வாக்குகளை அள்ளி குவித்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மானுக்கும் ,அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்த கைம்மாறு என்ன ?

அன்றிலிருந்து இன்றுவரை தனது கட்சிக்கும் தலைவருக்கும் விசுவாசமாக இருந்துகொண்டிருக்கும் சகோதரர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மான் இன்று எவ்வித அரசியல் பதவிகளுமின்றி எவ்வித அதிகாரமின்றி வாய் மூடி மௌனியாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் ஒரு சிலருக்கு திணைக்களத்தில் பதவிகளும் ,இன்னோர் சிலருக்கு கட்சியில் பெரும் பதவிகளும் வழங்கப்பட்டன ஆனால் இவருக்கு ஏன் வழங்க படவில்லை ?

சகோதரர் கலீலுர் ரஹ்மானிடம் பதவிகள் கொடுக்க என்ன இல்லை ஆளுமை இல்லையா கல்வி தகமை இல்லையா அதுவும் வேண்டாம் மக்கள் செல்வாக்குதான் இல்லையா ஏன் இவர் புறக்கணிக்கப்படுகின்றார்

கட்சி வேட்பாளருக்கே இந்த நிலை என்றால் கட்சிக்கு நம்பி வாக்களித்த எம் நிலை என்ன ? இனி எவ்வாறு கட்சியையும் தலைமையும் நம்புவது என மக்களின் அடிமனதில் சந்தேகம் எழுந்துள்ளது

தேர்தல் காலங்களில் ஊரில் கட்சிக்காக பங்களிப்பு செய்யாத ஒரு சிலருக்கு கல்முனை மண்ணில் அமைப்பாளர் பதவிகளும் ,அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன இது எந்த விதத்தில் நியாயம் ?
இது மிகவும் மனதுக்கு கவலை தரும் விடயமாகும் வீடு வாசல் ,கடைவாசல் ,தெரு தெருவாக ஏறி வாக்கை அள்ளி கொடுத்தவர் புறக்கணிக்கப்படுவதன் மர்மம் என்ன ?

கடந்த பொதுத்தேர்தலில் கௌரவ அமைச்சர் ரிசார்ட் பதுறுதீன் அவர்களினால் ஒரு வாக்குறுதி வழங்கக்கப்பட்டது அதாவது கல்முனைக்கு தேசியப்பட்டியல் அது கட்சியின் செயலாளர்
வை .எல்.ஸ் .ஹமீட்டுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார் ஆனால் வழங்கப்படவில்லை தேசிய பட்டியல் வேறு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது அதில் ஒரு சில நியாயங்கள் இருக்கின்றன அதை பற்றி பேச விரும்பவில்லை காரணம் கட்சி வளர்க்க வேண்டும் நோக்கில் தலைவர் வழங்கியுள்ளார் அனைத்து கட்சி தலைவர்களும் இதைத்தான் விரும்புவார்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் சகோதரர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலீலுர் ரஹ்மானுக்கு இதுவரை எவ்வித பதவியும் வழங்கப் படாமல் இருப்பதை ஒரு போதும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் அவருக்கு வாக்களித்த மக்கள் அவரிடம் தான் உதவிகள் கேட்பார்கள் மாறாக கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ .ஆர் ,எம் . ஜிப்ரியிடம் கேட்கமாட்டார்கள் இதனால் பாதிக்கப்படுவது சகோதரர் கலீலுர் ரஹ்மானும் ,அவரை நம்பி வாக்களித்த மக்களும் தான் என்பதை அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசார்ட் பதுறுதீன் புரிந்து கொள்ளவேண்டும்
இல்லையெனில் எதிர்வரும் தேர்தல்களில் அ .இ.ம.காங்கிரஸ் சார்பாக களமிறங்க வேட்பாளர்கள் அச்சம் அடைவார்கள் என்பதை  அமைச்சர் ரிசார்ட் பதுறுதீன் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -