நாம் எங்கே சிங்கப்பூர் எங்கே...

மூத்த ஊடகவியலாளர் எம்.ஐ.முபாரக்-

ரசியல்வாதிகள் அபிவிருத்திபற்றிப் பேசும்போதெல்லாம் சிங்கப்பூரையே உதாரணம் காட்டுவர்.அந்த ஊரை சிங்கப்பூராக்குவேன்;இந்த நாட்டை சிங்கப்பூராக்குவேன் என்று வீராப்பு பேசுவர். அப்படிச் செய்ய முடியுமா என்று வீராப்பு பேசும் அவர்களுக்கும் தெரியாது கேட்டுக்கொண்டிருக்கும் இவர்களுக்கும் தெரியாது.

அந்த நாட்டைப் பற்றிய ஒரேயொரு தகவலை அறிந்துகொண்டால் மட்டும் போதும் சிங்கப்பூர் பற்றிய பேச்சையே இனி எடுக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி,மொத்த தேசிய உற்பத்தியில் சிங்கப்பூர் உலகின் நான்காம் இடம்.உலக வங்கியின் அறிக்கையின்படி மூன்றாமிடம்.

இலங்கையோ சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி 104 ஆவது இடம்.உலக வங்கியின் அறிக்கையின்படி 99 ஆவது இடம்.இப்போது புரிகிறதா நாம் எங்கே சிங்கப்பூர் எங்கே என்று. ஊழலுக்குள் சிக்கிக் கிடக்கும் இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டுவதுபோல் சிங்கப்பூரைக் காட்டி மக்களிடன் வாக்குக் கேட்க மட்டும்தான் முடியும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -