ஹசன் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்-நசீர்

பி. முஹாஜிரீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலமிக்கதொரு கட்சியாக கொண்டு செல்வதற்கு அனுபமும் ஆற்றலுமுள்ள சிரேஷ்ட கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் இன்று (09) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில் மேலும் தெரிவித்ததாவது.

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் சம்மந்தமான காணிப் பிரச்சினைகள, கல்விப் புல பிரச்சினைகள் மற்றும் சமூகவியல் சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் வாய்ந்த, புள்ளிவிபர ரீதியாக முஸ்லிம்களின் தரவுகளைப் பேசக்கூடிய, தேசியத் தலைவருக்கு அருகிலிருந்து ஆலோசனைகள் வழங்கி செயற்படக்கூடிய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டிய தேவை உள்ளது. அதனால் இந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கட்டாயம் செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கு வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரினால் மதிக்கப்பட்டவரும் ஆரம்பகால உறுப்பினராகவும் இருந்து இன்றுவரை கட்சிக்காக பாடுபட்டுழைத்து வரும் செயலாளர் நாயகம் ஹசன்அலியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தடுப்பதற்கு கட்சியில் எவருக்கும் அருகதை கிடையாது.

சுய நலப்போக்குடையவர்களும்இ அரசியல் வங்குரோத்துக்காரர்களும் தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக ஹசன் அலிக்கு வழங்கப்படவுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர்.

அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் தரவேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அது தருவதாக தலைமைத்துவம் உறுதியளித்திருக்கிறது. அதற்கமைய அந்த நியமனம் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம். எப்படி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை தலைவர் அட்டாளைச்சேனைக்கு யாருடைய எதிர்பார்ப்புமின்றி வழங்கினாரோ அதேபோன்று அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம். அது நிச்சயம் நிiவேறும்.
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கேட்டு பெற்றுக்கொள்வதற்கான உரிமைகள் அப்பிரதேச மக்களுக்குள்ளன. இதேவேளை ஹசன் அலிக்கு வழங்கப்படவிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தடுப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.

தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். தலைமைத்துவத்திற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது. துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதோ அறிக்கைகளை விடுப்பதோ கண்டிக்கத்தக்க விடயமாகும். தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு கட்டுப்பட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். தலைமைத்துவம் சந்தர்ப்பத்திற்கேற்ப சாணக்கியமாக முடிவெடுக்கும். அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் வரைக்கும் ஹஸன் அலி அவர்கள் அட்டாளைச்சேனைக்கான பிரதிநிதியாகவும் செயற்படுவார், அவர் செயற்பட வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார். இவ்வாறு செயற்படுவதற்கு இவர் யார்? இவர் எந்தக் கட்சியிலிருந்து வந்தவர்? இன்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சிலர் சிறைகளில் இருப்பதற்கு இவர்தான் காரணம். இவர் தலைமைத்துவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி செயற்பட வேண்டிய தேவையுமில்லை, தகுதியுமில்லை. இவர்களது முதலைக் கண்ணீர் அர்த்தமற்றது.

தேசியப் பட்டியல் முறையை விட்டு விட்டு ஏன் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது என்பதனை இந்த தலைமைகள் மக்களுக்கு கூற வேண்டும்.

எனவே மக்கள் தெளிவடைய வேண்டும். அப்போதுதான் தலைமைத்துவங்கள் தமது முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். அட்டாளைச்சேனை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும்இ ஹசன் அலிக்கும் முடிச்சு போட்டு மக்களை வீணாக குழப்பமடையச் செய்ய வேண்டாம்.

இந்நிலையில் பிரதேச மட்டங்களிலுள்ள சிறுஇ சிறு தலைமைகள் தமது சுயநல போக்கை கைவிட்டு பிரிந்து நிற்கும் எமது அரசியல் தலைமைகளை ஒற்றுமைப் படுத்தி எம்முன்னே தோன்றி வரும் சமூகத்தின் சவால்களை வெல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -