கண்ணீரோடு விளையாடும் அமீர் அலி..!

கிழக்கான் அஹமட் மன்சில்-
ல்முனைக் கடற்கரையில் இருந்து காணமற்போன ஆறு மீனவர் மற்றும் இரண்டு படகுகள் பற்றிய போலித் தகவல்களை வழங்கி இன்று வரை காணாமற் போயுள்ள நான்கு மீனவர்களின் குடும்பங்கள் விடும் கண்ணீரில் அரசியல் விளையாட்டை காட்டியுள்ளார் பிரதி அமைச்சர் அமீர் அலி. நடுக்கடலை துச்சமென மதித்து ஒரு வேளை சோற்றிக்கு உயிரை பணயம் வைக்கும் மீனவர்களின் வாழ்வோடு அரசியலை நகர்த்த நினைத்த கல்முனை தொகுதி அகில இலங்கை மக்கள் காங்ரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி,பிரதி அமைச்சர் அமீர் அலியோடு இணைந்து நகர்த்த இருந்த அரசியல் சித்து விளையாட்டு என்பதை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மீனவர்களின் வாக்கு மூலம் புரிய வைத்திருக்கிறது.

தவறான செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரசித்தம் பெற்றவர் என்பதை தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி மூலம் அறிய முடிந்தது.

2017.01.05 ம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியினால்,காணமற் போன இரண்டு படகுகளும் ஆறு மீனவர்களும் மாலைதீவில் கண்டுபிடிக்கப்பட்டதாக மீனவ சங்கத்தினருக்கு உறுதி மொழி அளிக்கப்பட்டது.குறித்த தகவலின் உண்மைத் தன்மை அறிய கடற் தொழில் நீரியல் வள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது " குறித்த தினம்(2017.01.05) பிரதியமைச்சர் அமீர் அலி கடற்தொழில் அமைச்சுக்கு தொடர்பு கொண்டார்.எங்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஒரு படகும் இரண்டு மீனவர்களும் இதுவரை மாலைதீவுப்பகுதியில் கண்டுபிடிக்கபட்டுள்ளனர் என அவருக்கு தெரிவித்தோம்."கடற் தொழில் அமைச்சினால் தகவல் சரியாக வழங்கப்பட்டிருந்தும பிரதியமைச்சரினால் மீனவ சங்கத்தினருக்கு மெருகூட்டப்பட்டு கூறப்பட்டதன் நோக்கம் என்ன?

குறித்த தினத்தில் ஊடகங்களுக்கு பிரதி அமைச்சரின் அதிரடி நடவடிக்கை மூலம் மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.கடற்தொழில் நீரியல் வள அமைச்சுக்கு தொடர்பினை மேற் கொண்டு சரியான தகவலை பெற்று ஊடகங்களுக்கு பிழையான தகவல்களை வழங்குவதை பிரதி அமைச்சர் அதிரடி நடவடிக்கையாக நினைத்திருக்கிறார்.

அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்முனை அமைப்பாளர் ஜிப்ரியின் தவறான வழிகாட்டல் மூலம் மீனவர்கள் கொழும்பிற்கு கடந்த 2017.01.05 ம் திகதி வருகை தந்தது மீனவ சங்கம் பிரதி அமைச்சர் ஹரீசுக்கு செய்த மாபெரும் துரோகமாகும். மீனவர்கள் காணாமல் போன தினத்தில் இருந்து இன்றுவரை அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பிரயத்தனம் எடுப்பவர் பிரதி அமைச்சர் ஹரீஸ்.ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பிரபலமாக நினைத்தவர் அமீர் அலி.சில நேரம் மீனவர்கள் ஆறு பேரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் பிரதி அமைச்சர் அமீர் அலி இளநீர் குடிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் கோம்பை சுமந்திருப்பார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் அமீர் அலி காணாமல் போன மீனவர்கள் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடித்தது, கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை எதிர்வரும் மா.ந.ச தேர்தலில் களம் இறக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும்.அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கும் நீங்கள் மீனவ குடும்பங்களின் கண்ணீரோடு விளையாட நினைத்தது மனிதபிமானத்துக்கு புறம்பானது.

அதிரடி நடவடிக்கையால் மீனவர்களை கண்டு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.மாலைதீவிற்கு செல்லவும் தேவை இல்லை. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று உங்கள் அனுதாபத்தையாவது தெரிவிக்க முடியுமா? பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் விடுக்கும் சவாலாக ஏற்று கொண்டு நிறை வேற்றி காட்டுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -