ஹஜ் விசாரணைக் குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்..!

ஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக ஹஜ் கட­மையை நிறை­வேற்­றி­ய­வர்­களால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கான குழுவின் புதிய தலை­வ­ராக ஓய்வு பெற்ற நீதி­பதி யு.எல்.எம்.மஜீட் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளார்.

இவ்­வாரம் நிய­மனக் கடிதம் கைய­ளிக்­கப்­ப­டு­மெ­ன அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி மொஹமட் தாஹா சியாத் தெரி­வித்தார்.

ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் குழுவின் தலை­வ­ராகக் கட­மை­யாற்­றிய ஓய்வு பெற்ற நீதி­பதி ஏ.டபிள்யூ. ஏ.சலாம் தனது பத­வியை வேலைப்­பளு கார­ண­மாக இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்தே அவ்­வி­டத்­துக்கு ஓய்வு பெற்ற நீதி­பதி யூ.எல்.எம்.மஜீட் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.

ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக ஹஜ்­ஜா­ஜி­களால் சுமார் 20 முறைப்­பா­டுகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், விசா­ர­ணைக்­குழு முறைப்­பா­டு­களை விசா­ரித்து குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கான தண்டனையை சிபாரிசு செய்யும் எனவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -