தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமாம் தீபா- தமிழ் நாடு எங்க போகுமோ

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.

இருந்தாலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வரும்படி தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர்.

தினமும் தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சென்று அவரை வற்புறுத்தினார்கள்.

தொண்டர்கள் மத்தியில் அடிக்கடி தீபா பேசினார். ஆனாலும் அவர் அரசியலில் குதிப்பாரா? என்ற சந்தேகம் இருந்தது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நேற்று அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாகவும், மக்கள் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட தீபா தனது அத்தையின் (ஜெயலலிதாவின்) சொத்துக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் பயன்படுத்திய பேனாவை மட்டும் தந்தால் போதும் என்று உணர்ச்சி ததும்ப கூறினார்.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அரசியலின் அடுத்த கட்டத்தை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தீபா அரசியலில் குதித்து இருப்பது அவரை ஆதரிக்கும் அ.தி.மு.க. தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவின் அறிவிப்பை தொடர்ந்து அவரை பார்க்க வரும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இன்று காலை 8 மணி முதல் தீபா வீட்டின் முன்பு தொண்டர்கள் திரண்டனர். அவர்களை வரிசையாக ஒவ்வொருவராக வீட்டுக்குள் அழைத்து தீபாவின் கணவர் பேசினார்.

அப்போது, தற்போது கட்சியின் நிலைமை, தொண்டர்களின் எண்ணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற செய்ய வேண்டிய பணிகள் பற்றி அவர்களிடம் கருத்து கேட்டார்.

அவர்கள் சொல்வதை உன்னிப்பாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். மாலை 4 மணிக்குத்தான் தீபா தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். எனவே வெளியூர் தொண்டர்கள் தீபாவிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை கடிதமாக எழுதி தெரிவிக்கலாம். அந்த கடிதங்களை போடுவதற்காக 3 பெரிய தபால் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பலர் தங்கள் கோரிக்கைகளை எழுதி அந்த பெட்டியில் போட்டனர்.

சேலம், ஈரோடு, மதுரை, விழுப்புரம் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர்.

பெண்களை அதிக நேரம் காக்க வைக்காமல் உடனடியாக அழைத்து கருத்து கேட்டு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்ட தீபா முடிவு செய்துள்ளார்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 23-ந்தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கான சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சுற்றுப்பயண விபரம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாவட்ட அளவில் தீபா பேரவை தொடங்குவது, தீபா தலைமையில் அணி திரள்வது என்று கட்சி நிர்வாகிகள் இறங்கிவிட்டனர்.

கோவையில் இன்று மேலும் ஒரு எம்.எல்.ஏ. தீபா தலைமையை ஏற்று செயல்பட போவதாக அறிவிக்க உள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -