நாடு கடந்த தமிழீழ அரசு சம்பந்தமான கேள்விக்கு மங்கள சமரவீர பதில்

ண்மையில் பாரளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், நாடு கடந்த தமிழீழ அரசு சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் போது,
அந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை, அந்த அமைப்பை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை, அதனால் அந்த அமைப்பை பற்றி யாரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
அவருடைய இந்த கூற்று ஆச்சரியமாக உள்ளது எனலாம்.
உண்மையான எதிரியை இனம்கான தவறிவருகின்றார்களா? என்றும் என்னத்தோன்றுகிறது.

தமிழர்களின் உரிமை போராட்டம், ஆரம்பத்தில் அகிம்சை வழி போராட்டமாக இருந்து வந்தது, அது பிற்பாடு ஆயுத போராட்டமாக மாறியிருந்தது, அது பல ஆயிரம் உயிர் இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துவிட்டது எனலாம்.
ஆனால் அந்த போராட்ட வடிவம் இப்போது வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் கைகளுக்கு சென்றுள்ளது.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் புத்திஜீவிகளினால், நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி செயல்படுத்தியும் வருகின்றார்கள்.

இந்த அமைப்பை உலகநாடுகள் அங்கீகரிக்காது விட்டாலும், அவர்களின் செயல்பாடுகளை கண்டும் காணாதவர்கள் போல் நடந்து கொள்வதை நாம் அவதானிக்கலாம்.
அதன் மூலம் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் அவர்களுக்கு உண்டு என்பதும் புலனாகின்றது.

ஈழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டதின் பின், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் "நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கம்"என்ற அமைப்பினர் பல தாக்கங்களை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்,
நாடு கடந்த பாராளுமன்றத்தின் பிரதமராக "விஸ்வநாதன் ரூத்ரகுமார்" என்பவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு செயல்பட்டு வருகின்றார்.

இவர் கடந்த காலங்களில், ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பித்த போது, அதற்கு ஆதரவாக மனித உரிமை அங்கத்துவ நாடுகள் வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே ருத்திரகுமார் அவர்கள் ஆதரவு தேடியிருந்தார், அவரின் இந்த நடவடிக்கை இப்போதும் இலங்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது.

அதே நேரம் சனல்4 என்ற வெளிநாட்டு ஊடகமொன்று, இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தபட்டதாக கூறி அவர்களினால் வெளியிடப்பட்ட காணொளிகள் இலங்கை அரசாங்கத்தை பெரிய சவாலுக்கு உட்படுத்தியிருந்தது, இதற்கு பின்னால் இருந்ததும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்பதும் யாராலும் மறுக்கமுடியாததாகும்.

அதே நேரம் 2011ம் ஆண்டு தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவையில்,பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்ட ஆணையினை ஏற்றுக்கொண்டு, தன்னையும் ஒரு உறுப்பினாராக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பமும் செய்துள்ளது, அந்த விண்ணப்பம் இன்றுவரை அந்த சபையினால் நிராகரிக்கப்படவில்லை.

இவர்களின் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் பாரதூரமாக எடுக்காமல் அலட்சியப்படுத்தினார்கள் என்றால், பின்னாலில் அது இலங்கைக்கு மிக மோசமான நிலையை தோற்றுவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.

இலங்கையில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விட, நாடு கடந்த தமிழர்களினால்தான் இலங்கை இனப்பிரச்சினை சர்வமயப்பட்டது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.
அவர்களுடைய போராட்ட வியூகம் யூதர்களையும், பலஸ்தீனர்களையும் பின்பற்றியதாக உள்ளது எனலாம்.
உலக நாடுககள் விடுதலை புலிகளை பார்த்தது போன்று இந்த அமைப்பை பார்க்கவில்லை என்பது அவர்களுடைய நடவடிக்கை மூலமாக புரிந்து கொள்ளலாம்.
இலங்கை அரசாங்கத்துக்கு விடுதலை புலிகளினாலும், தமிழ் கூட்டமைப்பினாலும் வரும் அச்சுருத்தலை விட, இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால்தான் கடும் அச்சுருத்தலை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் இலேசாக இடைபோட்டு, தட்டிக்கழித்து நடப்பார்கலேயானால் அது மாபெரிய முட்டால் தனமானது என்பதே உண்மையாகும்.

யூதர்கள் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக, பல நாடுகளில் தவம் கிடந்தார்கள்,
அவர்களுடை ஆசையை பிரிட்டிஸ் காலணித்துவ ஆட்சியாளர்கள் அநியாயமான முறையில் பலஸ்த்தீனத்தை அபகரித்து யூதர்களுக்கு நாடு அமைத்து கொடுத்த வரலாறுகளும் உண்டு.

அதே நேரம் பலஸ்தீனத்தை பறி கொடுத்த மக்கள் யசீர்அரபாத்தின் தலைமையில் நாடு கடந்த அரசாங்கத்தை டுனீசியாவில் நடத்திவந்தது,
அதனை முன்பு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை, இருந்தாலும் காலப்போக்கில் உலக நாடுகள் அந்த "நாடு கடந்த அரசாங்கத்தை" அங்கீகரித்த விடயங்களையும் நாம் அறிவோம்.

ஆகவே, நாடு கடந்த தமிழீழ அரசினை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்தினால், அதிர்ச்சியான செய்திகளை இலங்கை மக்கள் காணவேண்டி வரலாம் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்ராஹிம்....
கல்முனை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -