மறைமுக நிகழ்ச்சி நிரலில் சிறுபான்மையினர் இனச் சுத்திகரிப்புக்காக குறிவைக்கப்படுகின்றனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

றைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்; தற்போது சிறுபான்மையினர் இனச் சுத்திகரிப்புக்காக குறிவைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபைத் (டீயவவiஉயடழய னுளைவசiஉவ ஊiஎடை ஊவைணைநn ஊழரnஉடை) தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் நாட்டின் வேறு பல இடங்களிலும் கூர்ப்படைந்து வரும் இனவிரிசல்கள் குறித்து அபாய எச்சரிக்கை ஒன்றை விடுப்பதாக அவர் இன்று செவ்வயாக்கிழமை (17.01.2017) தெரிவித்தார்.

இது பற்றி தொடர்ந்தும் தெரிவித்த அவர்ளூ

கடந்த வருடத்திலும் இவ்வாண்டின் துவக்கத்திலும் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிணக்குகள் தீவிரமாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதனூடாக இன உறவுகள் கசப்படைந்து அவநம்பிக்கையும் உருவாகி வருகின்றது.

மோதல் இடம்பெற்ற காலத்திலும் அதற்குப் பின்னரும் மீள் குடியேற்ற இணைப்பாளராக சேவை செய்தவன் என்ற அனுபவத்தின் அடிப்படையிலும் இந்த இன உறவுகளின் மூல காரணங்களை ஆராய்ந்து ஆய்வு செய்தவன் என்ற வகையிலும் நான் சில கருத்துக்களை இங்கு கூறுவது காலத்திற்குப் பொருத்தமானதாகும் என்று கருதுகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற பிரதேசங்களில் இராணுவம் காணிகளை ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்டுள்ளது என்ற குரல்களை காணிகளை இழந்த தமிழ் முஸ்லிம் மக்கள் எழுப்பினார்கள்.

ஆயினும், சிங்கள மக்களுக்கு அந்தப் பிரச்சினை இருக்கவில்லை.

தற்பொழுது ஒரு புதிய விவகாரம் புதிய வீச்சில் வெடித்துக் கொண்டு வருகின்றது.

புராதன பௌத்த வழிபாட்டுத் தலம் இருந்த இடம் என்று கூறி 16ஆம் நூற்றாண்டுக்கு முன்பதாக இருந்த பௌத்த விகாரைகளை சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்கள் என்று நிரூபித்துக் கொண்டு அவ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகளில் பௌத்த மதத் தலைவர்களில் ஒரு சாரார் கன கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.

அதுபோல சில விஷமிகள் வழிபாட்டுத் தலங்களை நாசம் செய்கின்றனர்.

இவ்வாறான கசப்பூட்டும் வெறுப்பூட்டும் சம்பவங்கள் நாட்டில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இன உறவுகளைக் குழப்புவதற்காக இன வாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இன ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகள் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து ஒரு அபாய முன்னெச்சரிக்கையை மக்களுக்கு விடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கின்றோம்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களுக்குத் திரும்புவது அந்த மக்களுடைய உரிமையாகும்.

இனவாதங்களுக்கு அப்பால் சென்று அந்த உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரச கட்டமைப்புக்களுடைய கடமையுமாகும்.

மீள் குடியேறலுக்கும் மீள் திரும்பலுக்குமான சர்வதேச நியமங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூற வேண்டும்.

அதை விடுத்து 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் படையெடுத்து வந்தவர்களால் அழித்தொழிக்கப்பட்ட, யார் வாழ்ந்தார்களோ என்று கூட துல்லியமாகத் தெரியாத நிலையில் அந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி கூறுவதுடன் அவ்விடங்களைப் பாதுகாப்பதற்கு படையினரை நிலைநிறுத்த வேண்டும் என்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது எந்த வகையில் இன நல்லுறவை வளர்க்க உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நாட்டில் மேற்கொண்டும் சிறுபான்மை இனங்கள் அச்சமின்றி வாழ முடியுமா என்ற நியாயமான சந்தேகத்தையும் ஜனாதிபதியின் கூற்று சுட்டி நிற்கின்றது.

மேலும், புராதன இடங்களைப் பாதுகாப்பதற்கு இராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்ற ஜனாதிபதியின் கூற்றின் அடிப்படையில் நாங்கள் பெரும்பான்மையினத்தையும் பௌத்தத்தையும் பாதுகாக்கப் பணிக்கப்பட்டுள்ள இராணுவத்தால் விரட்டப்படுவோமா என்ற அச்சத்தை சிறுபான்மையினர் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான கொள்கைகளை அல்லது நிலைப்பாடுகளை நல்லாட்சியின் அரச தலைவர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்?

அவ்வாறாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியும் அதேபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவும் அவர் பிரதிநித்துவம் செய்கின்ற கட்சியும் இந்த விடயத்தில் மறைபொருளான கருத்தொருமைப்பாடு கொண்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகத்தை சிறுபான்மை இனங்கள் எழுப்புவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

எல்லாத் திட்டங்களும் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு சூட்சுமமாக மிக இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 30 வருட யுத்த காலத்தில் தமது பூர்வீக வாழிடங்களை இழந்து தவிக்கும் அனைவரும் தமது பழைய வாழிடங்களுக்குத் திரும்புவதற்குத் தோதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமே தவிர புராதன இடங்களெல்லாம் எங்களுக்கு உரித்தானது, அந்த இடத்தில் வாழ்கின்ற ஏனைய சிறுபான்மையினர் வெளியேற வேண்டும் என்ற புனை கதைகளைக் கூறிக் கொண்டு பெரும்பான்மையினத்தவரை இராணுவத்தினரின் துணை கொண்டு குடியேற்றவும் புராதன பௌத்த மதத் தலங்களைக் கட்டிnழுப்ப முனைவதும் இப்பொழுது தேவையல்ல என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -