'குடிநீர் கிடைக்காமல் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது' ஹக்கீம்



அமைச்சர் ரவூப் ஹக்கீம்
ண்ணீரை சிக்கனமாக பாவியுங்கள், அதன் மூலமே எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும்,பிரதான தேவையான குடிப்பதற்கும் சமைப்பதற்குமே இந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் பாவிக்கப்பட வேண்டும் மாறாக தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு இந்த குடிநீரினை பயன்படுத்துவது விரைவில் நீர் தட்டுப்பாடு ஏற்பட ஏதுவாக அமைந்து விடும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகால்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பதுளை மாவட்டம் மஹியங்கனை நாகதீப பிரதேசத்தில் 312 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (22) நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பலர் தமது வாகனங்களை கழுவுவதற்கும், தோட்டத்தில் உள்ள மரம் செடி கொடிகளுக்கு நீர் பாய்ச்சுவற்கும், இன்னும் சுத்திகரிப்பு வேலைகளுக்கும் குடிநீரினை பயன் படுத்துகின்றனர். இதன் மூலம் பாரிய அளவில் நீர் வீண் விரயம் செய்யப்படுகிறது. நீர் கிடைக்கும் போது நாம் விரயம் செய்வதனால் தேவையான சந்தர்ப்பங்களில் நமது பாவனைக்கு குடிநீர் கிடைக்காமல் போய்விடும் அபாயம் எழுந்துள்ளது . எனவே நீரை பாதுகாப்பதிலும் அதனை தேவைக்கு மாத்திரம் பாவிப்பதிலும் நாம் அவதானமாகவும்,பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

இப்போது சில இடங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது வறட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் நீர் வழங்குவற்கான தற்காலிக மாற்று நடவடிக்கைகளை நாம் முன்மொழிந்துள்ளோம், பவுசர் மூலம் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் சில பிரதேசங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில பிரதேசங்களில் பாரிய கொள்கலன்களை நிறுவி நீர் வழங்கும் திட்டங்களை உத்தேசித்துள்ளோம். இவைகள் விரைவில் சாத்தியப்படும்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்னிடம் இந்த பாரிய பொறுப்பை நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார்கள், இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுமார் 300 பில்லியன் ரூபாய்கள் எமது அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் தூய்மையான சுத்தமான குடிநீர் வழங்கப்படவேண்டும் என்ற தார்மீக எண்ணம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் இருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகளை நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் மிகுந்த அவதானத்துடன் செய்து வருகிறோம், சில இடங்களுக்கு தற்காலிக தீர்வாக இந்த குடிநீர் வழங்கப்பட்டாலும் இன்னும் சில மாதங்களில் நிரந்தரமாக உங்கள் வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார் .

இந்தத் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்திலுள்ள ஹீரஸ்ஸகொட , நாகதீப , பட்டியகெதர, மகபிட்டிய மற்றும் பக்கினிதண்டுகொல்ல போன்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய மொத்தமாக 312 குடும்பங்களை சேர்ந்த 1013 பயனாளிகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருக்கும் இந்த நீர் வழங்கல் திட்டத்திற்கு 44 மில்லியன் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளது  இதன் மூலம் நீண்ட காலமாக இந்தப்பிரதேசத்தில் நிலவிவந்த அத்தியவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கிராமத்து மக்கள் தெரிவித்தனர் 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , லட்சுமன் செனவிரத்ன மற்றும் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ .அன்சார் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -