மஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் - ரணில் அறி­விப்பு

ம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­மாறு சீன ஜனா­தி­பதி தனக்கு அழுத்தம் பிரயோகித்தார் எனவும் சட்­ட­வி­ரோ­தமான முறை­யி­லேயே சீனா­வுடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறை­முக ஒப்­பந்­தத்தை கைவி­டுவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கடந்த மாதம் சீனா­விற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறை­மு­கத்தை நல்­லது என்று கூறி­னாரா ? இல்­லையா? சீன மெர்ச்சன்ட் நிறு­வ­னத்தை இலங்­கைக்கு அழைத்­தாரா? இல்­லையா எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

மேலும் கைத்­தொழில் பேட்டை வலயம் அம்­பாந்­தோட்­டைக்கு வேண்­டுமா? வேண்­டாமா என்­பதை பகி­ரங்­க­மாக அறி­விக்­க­வேண்டும். அம்­பாந்­தோட்­டைக்கு கைத்­தொழில் பேட்டை வலயம் வேண்டாம் என்றால் பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ரணை கொண்டு வாருங்கள். அம்­பாந்­தோட்­டையில் இடம்­பெற்ற அசம்­பா­விதம் தொடர்பில் பொலிஸ் அறிக்கை கிடைக்­கப்­பெற்­ற­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்த தயா­ரா­க­வுள்ளோம் என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார். 

2017ஆம் ஆண்டின் முத­லா­வது பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொடர் நேற்று திங்­கட்­கி­ழமை காலை 9.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் ஆரம்­ப­மா­னது. 

அதன்­போது நிலை­யி­யற்­கட்­டளை 23இன் கீழ் இரண்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரணி முன்­ன­ணியின் கூட்டு எதி­ரணி ஆத­ர­வா­ள­ரான தினேஷ் குண­வர்த்­தன எம்.பி எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்­தன எம்.பி தனது கேள்­வியில், அமைதி வழி போராட்­டத்தில் ஈடுப்­பட்ட மக்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது தொடர்பில் நீதி­யான விசா­ரணை நடத்­தப்­ப­டுமா? துறை­முக ஒப்­பந்தம் அர­சி­ய­ல­மைப்­புக்கு உடன்­பட்­டதா? துறை­முக ஒப்­பந்­த­தினால் அம்­பாந்­தோட்டை துறை­முகம் எமக்கு இழக்க வேண்டி ஏற்­ப­டு­வது மாத்­தி­ர­மின்றி இதன்­போது கைத்­தொழில் பேட்டை ஆரம்­பித்தால் விகா­ரைகள், தனியார் உடை­மைகள் மற்றும் தொல்­பொ­ரு­ளி­யியல் பிர­தே­சங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டுமா ? என வின­வி­யி­ருந்தார். 

இதன்­போது பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க , 

அம்­பாந்­தோட்­டையில் கைத்­தொழில் பேட்டை வலயம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­மை­யினால் அங்­குள்ள விகா­ரை­க­ளுக்கோ, தொல்­பொ­ரு­ளி­யியல் பிர­தே­சங்­க­ளுக்கோ, வீடு­க­ளுக்கோ பாதிப்பு ஏற்­ப­டாது. தெற்கு பொரு­ளா­தார வல­யத்தில் 95வீதம் அரச காணி­க­ளையே உப­யோ­கிக்க உள்ளோம். இதில் எந்­த­வொரு பாதிப்பும் மக்­க­ளுக்கு ஏற்­ப­டாது. இந்­நி­லையில் அம்­பாந்­தோட்­டையில் காணி­களை இனங்­காண்­ப­தற்கு நான் குழு­வொன்றை நிய­மித்­துள்ளேன். அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தலை­மை­யி­லான குழுவில் இணைத்­த­லை­வ­ராக சமல் ராஜ­பக்ஷ ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் குழுவில் ரஞ்ஜித் மத்­தும பண்­டார, சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த குழு­வினால் பரிந்­து­ரைக்­கப்­படும் காணிகள் உப­யோ­கிக்­கப்­படும்.

முத­லா­வது முத­லீட்டை இலங்­கை­யரே முன்­னெ­டுப்பார் இந்­நி­லையில் தெற்கு கைத்­தொழில் பேட்டை வல­யத்தில் முத­லா­வது முத­லீட்டை இலங்­கை­யரே செய்­ய­வுள்ளார். இதன்­பி­ர­காரம் சிமெந்து தொழிற்­சாலை ஒன்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதே­போன்று சீன நிறு­வ­னங்­களும் முத­லீ­டுகள் செய்­ய­வுள்­ளன. இதன்­படி எண்ணெய் சுத்­த­க­ரிப்பு நிலை­யங்­களும் வேறு பல பேட்­டை­களும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்கு அப்பால் அமெ­ரிக்­கா­வு­டனும் அரபு நாடு­க­ளு­டனும் இன்­னு­மொரு எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­ய­மொன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தையை நடத்தி வரு­கின்றோம்.

வேண்­டுமா ? வேண்­டாமா? 

கைத்­தொழில் பேட்டை வலயம் அம்­பாந்­தோட்­டைக்கு வேண்­டுமா? வேண்­டாமா? அம்­பாந்­தோட்டை இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பு வேண்டாம் தொழிற்­சா­லைகள் வேண்டாம் எனில் பாரா­ளு­மன்­றத்­திற்கு கைத்­தொழில் பேட்டை வேண்டாம் என பிரே­ரணை கொண்டு வாருங்கள். அப்­போது நாம் பேசி தீர்ப்போம். ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட அம்­பாந்­தோட்­டைக்கு வேண்டாம் எனில் பொலன்­ன­று­வைக்கு தரு­மாறு கோரி­யுள்ளார். விஜித் விஜ­ய­முனி சொய்ஸா மொன­ரா­க­லைக்கு தரு­மாறு கோரி­யுள்ளார். லக்ஷ்மன் கிரி­யெல்ல கண்­டிக்கு தரு­மாறு கோரி­யுள்ளார். கயந்த கரு­ணா­தி­லக்க காலிக்கு தரு­மாறு கோரி­யுள்ளார். 

மஹிந்த தயாரா?

அத்­துடன் அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்பில் இர­க­சி­ய­மாக எந்­த­வொரு ஒப்­பந்­த­தையும் நாம் கைச்­சாத்­தி­ட­வில்லை. இது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து விவாதம் நடத்­தி­யதன் பின்­னரே ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டுவோம். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சென்ற மாதம் சீனா­விற்கு சென்ற போது சீனாவில் என்ன பேசினார். சீனா­விற்கு சென்று மர்சன்ட் நிறு­வ­னத்­திற்கு இலங்­கைக்கு வருகை தரு­மாறு அழைத்­தாரா ?இல்­லையா? சென்செய் துறை­மு­கத்தை நல்­லது என்று கூற­வில்­லையா? சீன ஜனா­தி­ப­தியின் அழுத்தம் கார­ண­மா­கவும் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யி­லேயே துறை­முகம் தொடர்­பான ஒப்­பந்­தங்கள் சீனா­வுடன் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தாக மஹிந்த ராஜ­பக்ஷ எனக்கு கடிதம் அனுப்­பினால் இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டு­வ­தனை உட­ன­டி­யாக கைவி­டுவோம். அப்­ப­டி­யாயின் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு கடிதம் எழுத சொல்­லுங்கள்.

அம்­பாந்­தோட்டை அசம்­பா­விதம் இதே­வேளை அம்­பாந்­தோட்டை கைத்­தொழில் பேட்டை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் பேசினேன். இவர்கள் ஒப்­புக்­கொண்­டனர். அமை­தி­யான போராட்டம் மாத்­திரம் நடத்­துவோம் என்று கூறி­ய­மை­யினால் நான் பொலிஸ் மா அதி­பரை அனுகி நீதி­மன்ற தடை உத்­த­ரவு தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்தோம். ஆனாலும் தடை உத்­த­ரவு குறித்து எனக்கு எவ்­வித தொடர்பும் இருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் அம்­பாந்­தோட்­டையில் நடத்த அசம்­பா­விதம் தொடர்பில் நீதி­யான விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.இதற்­கான பொலிஸ் விசா­ரணை அறிக்கை கிடைத்­த­வு­டன இது தொடர்பில் விவா­த­மொன்றை நடத்த முடியும்.

அம்பாந்தோட்டை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும் தான் பாராளுமன்ற தேர்தலிலும் எனக்கு வாக்களிக்கவில்லை. எனக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மக்களே வாக்களித்தனர். ஆனாலும் நான் வாக்கை பார்க்கவில்லை. அம்பாந்தோட்டை , மொனராகலை மாவட்ட இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கவே முனைகின்றேன். தற்போது நாட்டில் தொழில் பற்றாகுறை நிலவுகிறது. வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இதன்பிரகாரமே கைத்தொழில் பேட்டை வலயத்தை ஆரம்பித்தேன். அம்பாந்தோட்டை வாக்கு எனக்கு ஒருபோதும் கிடைக்காது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -