தற்போது உருவாகியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்கள் பிளவு படாமல் ஒன்றிணைவதே சிறந்தது -முதல்வர் அழைப்பு

ரசியல் ரீதியில் நாடு தீர்மானம் மிக்க கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில் முஸ்லிங்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியலமைப்பு திருத்தம் இடம்பெற்றுவரும் இந்த நிலைமையில் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதுடன் இந்த நேரத்தில் முஸ்லிங்களின் இராஜதந்திரம்மிக்க தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்,

தற்போது உருவாகியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிங்களை பிளவுபடுத்துவதற்காக பேரினவாத சக்திகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருவதுடன் அதில் ஒரு கட்டமாக அரசியலமைப்பு போன்ற விடயங்களில் இராஜதந்திரமாகவும் எந்த விதமான விட்டுக் கொடுப்பின்றியும் செயற்படும் தலைவர் ஹக்கீம் அவர்களை முஸ்லிங்களிடமிருந்து தூரப்படுத்துவதற்காக சில முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பயன்படுத்தி அவர் மீது அவதூறு பரப்பும் செயற்பாடுக​ைள ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,

எனவே போலியான பிரசாரங்களையும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் நம்பி ஏமாறாமல் ,மறைந்த பெருந்த தலைவர் அஷ்ரப்பின் பாசறையில் வளர்க்கப்பட்டு அவரின் இராஜதந்திர மற்றும் சாணக்கிய பாதையில் வீறு நடை போடும் தலைவர் ரவூப் ஹக்கீமின் கரங்களை பலப்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்,

முஸ்லிம் மக்களின் எதிர்கால இருப்பையும்,அரசியல் எதிர்காலத்தையும் அவர்களின் உரிமைகளையும் அரசியல் யாப்பின் மூலம் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் எனவும் அது தொடர்பான சீர்த்திருத்தங்களின் முஸ்லிங்களின் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அவற்றை இராஜதந்திரமாக முன்னெடுக்கக் கூடிய திறன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு மாத்திரமே உள்ளதுடன் அதைவிட ஆளுமை மிக்க ஒருவரை எங்காவது காட்ட முடியுமா எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கேள்வியெழுப்பினார்,

முஸ்லிங்களுக்கு தமது அடிப்படை கடமையான தொழுகையை நிறைவேற்றும் பள்ளிவாசலுக்கு போவதற்கு பொத்தானையில் தடை விதிக்கப்பட்ட போது அந்த மக்கள் தலைவரிடம் முறையிட்டனர் அதற்கு உடனடி நடவடிக்கை எடுத்த தலைவர் அந்தத் தடையை நீக்கி முஸ்லிங்கள் தமது தொழுகையை மேற்கொள்ள அனுமதி பெற்றுக் கொடுத்தார்

எந்த ஆர்ப்பாட்டமுமின்றி ஊடகக் கொண்டாட்டமின்றி அமைதியாகவும் பக்குவமாகவும் தமது சமூகத்துக்கான கடமை என உணர்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே மர்ஹும் அஷ்ரப் அடியொற்றி வந்த தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சிறப்பம்சமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கிழக்கு மற்றும் வடக்கில் மாத்திரமன்றி அனைத்து மாவட்டங்களிலும் தலைவரின் கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே ஆர்ப்பரிக்காமல் அமைதியாக சமூகத் தலைமைப்பொறுப்பையுணர்ந்து செயற்படும் தலைமையின் கரங்களை பலப்படுத்தி அதற்கு கீழ் ஒன்றிணைய அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அழைப்பு விடுத்தார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -