இன்னுமொரு ஆட்சி மாற்றம் தேவைப்படும் - ஆரிப் சம்சுதீன்

பி.எம்.எம்.ஏ.காதர்-
ன்றைய நல்லாட்சியை கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியவர்கள் தமிழ்.முஸ்லிம் சிறுபான்மை மக்களே இந்த சிறுபான்;மை தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு அநீதி இளைக்கப்படுமாயின் இன்னும் ஒரு ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருட பூர்;த்தியையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று(08-01-2017)கல்முனை அல்ஹாமியா அறபுக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கே.இராசதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ஆகியோருடன் இந்து, இஸ்லாமி சமையத்தலைவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் உரையாற்றுகையில்:- 

இன்றைய நல்லாட்சியில் நல்லது நடக்கும் என்று எண்ணிய சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை பேரினவாதிகளால் ஏற்படுத்தப்படுகின்ற அசௌகரியங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றது.இந்த நிலை தொடருமானால் இன்னும் ஒரு ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். இந்த நிகழ்வில் சிரமதானம்,மர நடுகை என்பன இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -