பொத்தானைப் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு -ஹக்கீமுக்கு நன்றி





எம்.ஏ.றமீஸ்-


ம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொத்தானை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலைச் சுற்றிவர தொல்லியல் திணைக்களத்தினர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர்எல்லை வேலி இட்டதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்டு வந்த அசாதாரண நிலை தற்போது முடிவிற்குகொண்டுவரப்பட்டுள்தாகவும் இதற்கான நடவடிக்ககையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளார் என கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அதற்கமைவாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீமிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று(25) இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போதுபொத்தானைப் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் தடை நீக்கப்பட்டதுடன், அதற்கானதடை அறிவித்தல் பலகையினையும் அகற்றுவதெனவும் தீர்வுகள் எட்டப்பட்டன.

இவ்விடயம் பற்றி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் குறிப்பிட்ட பள்ளிவாசலைச் சுற்றிவர எல்லை வேலி இடப்பட்டதுடன்,இப்பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதெனவும் இதனை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் கடந்த ஒருமாத காலப்பகுதிக்கு முன்னர் இப்பிரதேசத்தில் அறிவுறுத்தல் பலகை இடப்பட்டிருந்தன.

கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலில் தாம் மதக்கடமைகளைநிறைவேற்றி வந்த வேளையில் பள்ளிவாசலினையும் அதற்கான அடிப்படைத் தேவைகளையும் அமைக்கும்வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடந்த டிசம்பர் மாதம் 07ஆம் திகதி இப்பகுதிக்குவருகை தந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் வணக்கஸ்தலத்தினைச் சுற்றிவர எல்லையிடப்பட்டகற்களையும் அறிவுறுத்தல் பலகையினையும் இட்டமையினால் இப்பிரதேசத்தில் அசாதாரண நிலை தோன்றியதுஇவ்விடயத்தினை பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தததைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் மு.கா தலைவருக்கு நிலைமையினை எடுத்துகூறினார்.

இந்நிலைமையினை நேரில் சென்று ஆராயும் பொருட்டு அண்மையில் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் அழைப்பின் பேரில்அப்பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். நுpலைமையினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ரவூப்ஹக்கீம் இப்பிணக்கிற்கான தீர்வினை எட்டும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டார்.

மதக் கடமையினை இனிவரும் காலங்களில் தங்கு தடையின்றி நிறைவேற்றும் வகையில் நடவடிக்கையினைமேற்கொண்ட மு.கா தலைரும் அமைச்சருமாக ரவூப் ஹக்கீமிற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்இதவத்திற்கும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் தமது நன்றியினைத் தெரிவிப்பதாக பிரதேச மக்கள்தெரிவித்தனர்.

பொத்தானை எனும் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நெற்காணிகள் உள்ளன. இக்காணிகளில்பெரும்பாலானவை அக்கரைப்பற்றுப் பிரதேசத்தவர்களுக்கு சொந்தமானவையாகும். இங்குள்ள விவசாயிகளில்பெரும்பாலானவர்கள் தமது மதக் கடமையினை நிறைவேற்றுவதற்காக இப்பள்ளிவாசலினைப் பயன்படுத்திவந்தனர். தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது இப்பிரதேசத்தில் எல்லைக் கற்களை நிறுவியுள்ளதால்மதக் கடமையினை நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -