இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் - ராஜிதவின் மகன் அழைப்பு

சத்துர சேனநாயக்கா
பாறுக் ஷிஹான்-
மது அரசாங்கத்தின் ஒரு கொள்கையினை பின்பற்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் ஒரு நாட்டினை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என களுத்துறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் ராஐித சேனாரட்னவின் புதல்வர் சத்துர சேனநாயக்கா தெரிவித்துள்ளார். 

குறிப்பாக முழு அரசியல்வாதிகளும் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக முன்வரவேண்டும்.  கடந்த காலத்திலும் இவ்வாறான இனவாதம் பேசுவர்கள் இருந்து வந்துள்ளனர்.  அது மாதிரியாகத்தான் தற்போதைய காலத்திலும் இருக்கின்றது என்று களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்துரு சேனநாயக்கா தெரிவித்தார். 

எமது அரசின் கொள்ளை நடைமுறையினை நாங்கள் இன ரீதியாக பார்க்காமல் நாட்டினை உயர்வான நிலைக்கு கொண்டு செல்லவேண்டும்.  அதுதான் தற்போதைய காலத்திற்கு உகந்தது என்று அவர் தெரிவித்தார். 

வடமாகாணத்தில் பின்தங்கிய வறுமைக்குட்பட்ட 350 மாணவர்களுக்கான மனிதாபிமான உதவிகளின் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாண இலங்கை வேந்தன் கல்லூரியில் யாழ்ப்பாண மாவட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கும் அமைப்பாளர் செ.விஐயகாந்த் தலைமையில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வு பிரதம அதிதியாக களுத்துறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சத்துரு சேனநாயக்கா கலந்துகொண்டார். 

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்;


தேசிய அரசாங்கத்தின் பங்கு என்பதற்காக நாங்கள் எதனையும் கதைத்துவிட முடியாது அதில் ஒன்று கூடியே கதைக்கவேண்டும்.  அவையே ஒன்றுமையை ஏற்படுத்துகின்றது என்று அவர் தெரிவித்தார்.   உத்தேச புதிய அரசியல் சாசனம் தொடர்பாக எமக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. 

அதனையும் எமது அரசாங்கம் சரியான முறையில் மக்களுக்கான ஆட்சிகளை பெற்றுகொடுப்பார்கள் என்று களுத்துறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனநாயக்கா தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து யாழ்ப்பாண ஊடக அமையத்தில் ஊடகவியாளர்களை சந்தித்து ஊடகத்துறையினர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டதுடன் விசேட ஊடகவியாலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -