கிழக்கு மாகாண சபைக்கும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் இடையே முறுகல்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட், எம்.ரீ.எம்.பாரிஸ்-

ண்மையில் கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இதனால் பட்டதாரிகள் பாதிப்படைத்துள்ளதாக முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஜவாஹிர் சாலி சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் விரிவான ஆய்வு அறிக்கையினை ஊடகங்களுக்கு அவர் வெளிட்டுள்ளார்.அவ் அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதில் தமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த 5674 பேரில் நுண்ணறிவு, பொது அறிவு ஆகிய இரு பாடங்களிலும் 40 அல்லது அதற்கு மேல் எடுத்த 305 (5.38மூ) பேரும், சிங்கள மொழிமூலத்தில் விண்ணப்பித்திருந்த 633 பேரில் 67 (10.58மூ) பேரும் என 372 (5.9மூ) பேர் நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சை தொடர்பில் கல்வி நிர்வாகத்தில் ஓரளவு அனுபவம் பெற்றவன் என்ற ரீதியில் பின்வரும் விடயங்களை அவதானித்தேன்.

எ கடந்த 22.10.2016 ம் திகதியில் மேற்படி இரு பாடங்களுக்குமான போட்டிப் பரீட்சை மாகாணத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. ஆனால் விண்ணப்பம் கோரப்பட்ட போது பொது அறிவு என்பது கல்வி தொடர்பான விடயங்களில் பரீட்சிக்கப்படும் என குறிப்பிடப்பட்டதற்கு மாற்றமாக தேசிய, உலகவரலாறு, விளையாட்டு, பொருளாதாரம், விஞ்ஞானம் என பல்வேறு பகுதிகளை அடக்கி இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருந் ததால் பரீட்சார்த்திகள் அப்பரீட்சையை சரியாக அணுகமுடியவில்லை என்ற கருத்தும் எதிர்ப்பும் மேலோங்கியதால், கிழக்கு மாகாணசபையில் இவ்விடயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு, இப்பரீட்சை மீண்டும் நடாத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டு ஆளுநருக்கும் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து சரியாக ஐந்து வாரங்களுக்குப் பின் 27.11.2016 இல் கல்வி தொடர்பான பொது அறிவு வினாப்பத்திரம் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டது. இங்கு முதலாம் நாள் தோற்றிய சிலர் இரண்டாம் நாள் பரீட்சைக்கு தோற்றாமல் விட்டது ஒரு புறமிருக்க, இப்பரீட்சை வினாப்பத்திரம் கல்விப்புலத்திற்குள் புதிதாக சேரவிருக்கும் ஒருவரது கல்விதொடர்பான பொது அறிவைச் சோதிக்கும் வகையில் தயாரிக்கப்படாமல், மாகாண சபையின் தீர்மானத்தை விருப்பமின்றி ஏற்றுக்கொண்டதன் காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாகவும், கல்வியியல் டிப்ளோமா கல்வி முதுமானி மாணவர்களை சோதிக்கும் பரீட்சை ஒன்றின் அளவுக்கு அவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது என்பது வெறுப்பூட்டும் ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மையாகும் தற்போது அதன் விளைவு ஆகக்கூடிய புள்ளிகளாக 60 புள்ளிகளும் 50க்கு மேற்பட்ட புள்ளி களை தமிழ்மொழிமூலம் 06 பேரும் சிங்கள மொழிமூலம் ஒருவரும் பெற்று மொத்தமாக 40 புள்ளிகளும் அதற்கு மேலும் என தமிழ்மொழிமூலம் 307 (5.4மூ) பேரும் சிங்கள மொழிமூலம 72 (11.37மூ)பேரும் என மிகக்குறுகிய தொகையாக 379 (6மூ) பேரே மாகாணத்தில் விண்ணப்பித்திருந்த 6307 பேரிடையே பெற்றிருந்தனர்.

இத்தனைக்கும் இப்பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் 40மூ அல்லது அதற்குமேல் புள்ளிகளை பெறவேண்டுமென்ற நிபந்தனையும் வழங்கப்பட்டிருந்தது.

இப்பரீட்சை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் உட்பட அமைச்சர் வாரியம், கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், ஆணைக்குழுவின் செயலாளர் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வியிலாளர்கள தும் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை எனது கருத்துக்களாகவும், சந்தேகங்களா கவும் வினாக்களாகவும் முன்வைக்கிறேன்.

01. ஒரு போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 60 வரும்போது40மூ அல்லது அதற்கு மேல் புள்ளிகளை தமிழ் மொழிமூலம் 5.4மூ இனரும் சிங்கள மொழிமூலம் 11.37மூ இனரும் மாத்திரமே பெற்றிருக்க வெட்டுப்புள்ளி 40 என நிபந்தனைப்படுத்த முடியுமா?

40 என்பது வெட்டுப் புள்ளியாக வருவதென்றால் அதற்கேற்ப வினாப்பத்திரம் தயாரித் திருக்க வேண்டிய பொறுப்பு மாகாணப் பரீட்சை சபைக்கு உள்ளதல்லவா!

வினாப்பத்திரம் தயாரிக்கையில் மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டுமே தவிர தயாரிப்பவர்களின் மேதாவித் தனத்தை காட்டுவதற்காக அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், அத்துடன் மாகாண சபையின் தீர்மானம் பிடிக்காத தற்காக தங்களது கோபத்தை இந்தப் பட்டதாரிகளில் காட்டுவதில் எந்தவித நியாயமுமில்லை என்பதை கவலையுடன் கூறவேண்டி உள்ளது.

02. இப்பரீட்சையில் நுண்ணறிவுப் பரீட்சையில் ஒரு பரீட்சார்த்தி 92 புள்ளிகளைப் பெற்றுள் ளார். ஆனால் பொது அறிவுப் பரீட்சையில் 36 புள்ளிகளே அவருக்கு கிடைத்துள்ளது பொதுச்சேவை ஆணைக்குழுவின் முடிவின்படி 921036ஸ்ரீ128 புள்ளிகளைப் பெற்ற இவர் ஆசிரியராக வருவதற்கு தகுதியற்றவர். ஆனால் 401040ஸ்ரீ80 புள்ளிகளைப் பெற்றவர் தகுதியானவர், நுண்ணறிவில் 92 புள்ளிகளைப் பெறுவது என்பது சாதாரண விடயமல்ல, இப்படியான திறமைசாலிகள் இம் மாகாணத்திற்கு மாத்திரமல்ல நாட்டுக்கும் தேவையா னவர்கள். ஆனால் மாகாணம் இவ்வாறு பிழையாக சோதித்தால், எமது மாகாணத்தின் எமது நாட்டின் எதிர்காலக் கல்வியின் நிலை கேள்விக்குறியே!

03. போட்டிப்பரீட்சை என்பது இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டிருந்தால் ஒரே நாளிலும்,

மூன்று வினாப்பத்திரங்கள் எனில் அவற்றின் நேர அளவைப் பொறுத்து ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த இரு நாட்களிலும், நான்கு அல்லது அதைவிடக்கூடியதான வினாப்பத்திரங்கள் கொண்ட ளு.டு.யு.ளு போன்ற பரீட்சைகள் அடுத்தடுத்த இரு நாட்கள் போதாத பட்சத்தில் அடுத்தடுத்த வாரங்களில் நடாத்தி முடிக்கப் பட வேண்டும். அவ்வாறென்றால் தான் உண்மையான நுண்ணறிவு, தர்க்கறிவு, பொது அறிவு கொண்டவர்களை தெரிவு செய்ய முடியும்.

ஆனால் இங்கு நுண்ணறிவுப் பரீட்சை நடைபெற்ற 35 நாட்களுக்குப் பின் பொது அறிவு வினாப்பத்திரம் அதுவும் முறையற்ற வினாப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, இங்கு எப்படி சரியான தெரிவு கிடைக்கும்?

மேலும் மாகாண சபையில் 22.10.2016 இல் நடாத்தப்பட்ட பரீட்சையை நீக்கி விட்டு புதிதாக பரீட்சை வைக்க வேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவு இரண்டு வினாப்பத்திரங்களுக்குமா? அல்லது பொதுச்சேவை ஆணைக்குழு ஒரு வினாப்பத்திரம் என முடிவெடுத்ததா? என்பது கூட ஆச்சரியமான விடயம்தான்.

04. தற்போது வெட்டுபுள்ளியை குறைப்பது சம்பந்தமாக மாகாணசபையின் சலசலப்பு இருப் பதாக தெரிகிறது. பரீட்சையே பிழையென்று சொல்லும்போது வெட்டுப்புள்ளி குறைப்பு பற்றி பேசுவது பொருத்தமற்றது எனினும் அதன்மூலம் ஒரு சிலருக்காவது பரிகாரம் கிடைக்கலாம்.

92 புள்ளிகளை நுண்ணறிவில் பெற்ற பரீட்சார்ந்தி பொது அறிவில் 60 புள்ளிகளுக்கு குறையாமல் எடுக்கும் வகையில் இவ்வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தால்தான் இது ஒரு சரியான பரீட்சை என எடுக்கலாம்.

05. மேலும் பொது அறிவு வினாப்பத்திரம் 50 வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 02 முழுப்புள்ளிகளாக 100 புள்ளிகளுக்கு தயாரிக்கப்பட்டிருந்தது. அப்படியாயின் பொது அறிவு வினாப்பத்திரத்திற்காக பரீடசார்த்திகள் பெற்ற புள்ளிகள் இரட்டை எண்களில் வரவேண்டும் அப்படி இருக்கையில் தமிழ்மொழிமூலம் ஒருவர் 41 புள்ளிகளையும் அதேபோல் சிங்களமொழியில் பலருக்கும் ஒற்றை இலக்க புள்ளிகளும் கிடைத்ததுள்ளன. இது இப்பரீட்சை வினாப்பத்திரம் திருத்தல்பணியின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. இதற்கு விசேட காரணம் ஏதும் உண்டா என்பது மாகாண பரீட்சை சபைக்குத்தான் தெரியும்.

06. மேலும் இப்பரீட்சையில் தகுதி பெற்றவர்களில் பொது அறிவில் சரியாக 40 புள்ளிகள் பெற்றவர்கள் தமிழ்மொழிமூலம் 111 பேரும் சிங்களமொழிமூலம் 45 பேரும் உள்ளனர். இவர்களுக்கு ஏதாவது ஒரு விடை மேலும் பிழைத்திருந்தால் இரு மொழிகளிலும் 225 பேருக்கு குறைவானவர்களே தகுதி பெற்றிருப்பர்.

07. ஒரு பரீட்சைக்கு 40மூ என வெட்டுப்புள்ளி வைப்பதற்கு நியமனம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட தொகையை விடவும் அதிகமானவர்கள் அப்புள்ளிகளை பெற்றவர்க ளாகவும் நியமனம் பெற இருப்பவர்களிலும் சுமார்25மூ அதிகமானவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவும் வேண்டும். நேர்முகப்பரீட்சையில் சிறந்தவர்களில் அதி சிறந்த வர்களை தெரிதல் என்ற நோக்கக் கூற்றோடு தெரிவு நடாத்தப்படவேண்டும். அதன்படி இரு பாடங்களிலும் தகுதி பெற்றவர்களில் சுமார் 1600 பேராவது அழைக்கப்பட்டிருக்க வேண்டும் அப்படியென்றால் அதற்கேற்ப வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தேவையை விட மிகக்குறைந்த தொகையினரை அதிலும் பலரை 40 என்ற புள்ளிகளுடன் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கும் வகையில் மாகாணத்தின் நிலைமை சென்றுள்ளது. இதற்கு முழுமையான பொறுப்பையும் பொது அறிவு வினாப்பத்திரத்தை தயாரிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

08. இவ்வாறான பல பிரச்சினைகளை இப்பரீட்சை கொண்டிருக்கிறது. நான் குறிப்பிடாத பிரச்சினைகளையும் வேறுசிலர் அடையாளப்படுத்தலாம்.

இது எதிர்காலத்தில் எமது மாகாணத்தில் பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரியாகுவதை விட தனியான தொழில் செய்வது, அல்லது வெளிநாடு சென்று உழைப்பது மோல் என்ற எண்ணத்தை எதிர்கால சந்ததிக்கு கொடுத்து விடும் எத்தனையோ திறமையுள்ள பட்டதாரிகள் மனமுடைந்து எதிர்காலத்தை இழக்கும் நிலையையும் உருவாக்கும். எனவே பாதிக்கப்படும் பட்டதாரிகளுக்காக, அதில் சிறிதளவாவது பரிகாரம் வேண்டுமென்பதற்காகவும், இதில் ஏற்பட்ட பிழை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாதென்பதற் காகவும், மாகாணசபை மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு கௌரவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் பின்வரும் ஆலோசனைகளை அமுல்படுத்த கிழக்கு மாகாணத்தின் பொறுப்புக்கூறவேண்டிய அனைவரும் இதனை கருத்திலெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் முன் மொழிகிறேன்.

அ) ஏற்கனவே நேர்முகப்பரீட்சைக்கு தகுதி என அறிவிக்கப்பட்ட தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகள் 305 பேரும் சிங்களமொழிமூல பரீட்சார்த்திகள் 67 பேரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்கப்படவேண்டும்.

ஆ) இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமானி அனுமதிப் பரீட்சையில் நுண்ணறிவு, பொது அறிவு, தாய்மொழி, ஆங்கிலம் என நான்கு பாடங்களுக்கும் நான்கு வகை வெட்டுபுள்ளி இருப்பதைப்போல இங்கும் தேவைக்கேற்ப வெட்டுபுள்ளி மாற்றப்பட வேண்டும்.

அதன்படி பொது அறிவு வினாப்பத்திரத்தில் கிடைத்த அதிகூடிய புள்ளி 60 என்பதால் வெட்டுப்புள்ளி 30 ஆக குறைக்கப்படவேண்டும்.

இ) மேலும் காலம் தாழ்த்தாமல் மீண்டும் ஒரு விண்ணப்பம் கோரப்பட்டு முறையான போட்டிப்பரீட்சை நடாத்தப்பட வேண்டும். ஏனெனில் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டாலும் பல திறமைசாலிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு சரியான சந்தர்பம் வழங்கப்பட வேண்டும். அல்லது பரீட்சை இன்றி மூப்பு, திறமை அடிப்படையில் நேர்முகப்பரீட்சை மூலம் நியமனம் வழங்கப்படவேண்டும்.

ஈ)பட்டதாரிகளின் வேலையில்லாப்பிரச்சினை வருடாவருடம் அதிகரித்துச் செல்கிறது. பல்கலைக்கழகங்களின் வெளியீடுக்கு அளவாக வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை, எனவே மத்திய அரசுடன் கலந்துரையாடி அரச சேவையாளர் களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டமொன்றை 1990ம், 1996ம் ஆண்டுகளில் அமுல்படுத்தி யது போன்று தேசிய ரீதியில் அமுலாக்கி ஏற்படும் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளைக் கொண்டும், உயர்தரம் சித்தியடைந்தவர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டும்.

மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாகாண ஆளுநருக்கும் இடையே அடிக் கடி ஏற்படும் முறுகல் நிலை ஏதோ ஒரு முறையில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ மாகாணத்தை பாதிக்கிறது என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய, பொறுப்பானவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. இதன் ஒரு வடிவம்தான் மாகாண ஆளுநரின் கீழுள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப்பிரிவு திட்டமிட்டு, நியாயம் அற்ற முறையில் தயாரித்த இந்த கல்வி தொடர்பான பொது அறிவு வினாப்பத்திரமாகும் இது அப்பாவி பட்டதாரிகளின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்தையும் பாதிக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உணர்ந்து இதற்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன் மூலம் பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை தவிர்க்க வேண்டும். மாகாணத்தின் எதிர்காலம் இந்தப்பட்டதாரிகளில் மறைந்திருக்கிறது என்புதை ஏற்றுக் கொண்டு அவர்களை நல்ல முறையில் வழிப்படுத்தவேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -