கண்டி பிரதான வைத்தியசாலையில் நோயாளர்கள் திடீரென உயிரிழப்பு..!

இக்பால் அலி, பானகமுவ நிருபர்-
ண்டி பிரதான வைத்தியசாலையில் சிறுநீராக நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றிருந்த 3 நோயாளர்கள் 10-1-2017 திடீரென உயிரிழந்துள்ளனர். இதில் இரு உயிரிழப்புக்கள் இன்புலுஸ்னா என்.1 எச்.1 (N 1 H 1 ) வைரஸ் ஊடாக ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறு நீராகப் பிரிவில் வைத்தியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்கள் உட்பட எட்டுப் போர் இதுவரைக்கும் இன்புலுன்ஸா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்காக விடுமுறை லீவைப் பெற்றுக் கொண்டு வைத்தியசாலைக்கு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரத்தம் மற்றும் ஏனைய இரசாயனப் பரிசோதனைகளின் தகவலின் படி இதில் உயிரிழந்தவர்களில் இருவர் இன்புலுவென்ஸா வைரஸ் உள்ளதாக உறுதி செய்துள்ளதுடன் ஏனைய நோயாளர்களுடைய மரணமும் இதன் காரணத்தினால் ஏற்படலாம் எனவும் வைத்தியவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சிறு நீராகப் பிரிவில் 69 இலக்க வாட்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மூன்று பேர் உயிரிழுந்ததை அடுத்து அங்கு தங்கியிருந்து சிகிச்சைபெறும் சிறு நீரக வாட்டுக்குள் நோயாளர்களை அனுமதித்தல் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொருத்தமான வாட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்தநாயக தெரிவித்தார்.

தனியார் வைத்தியசாலையில் சிறு நீரக நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர் கண்டி வைத்தியாசலை சிறு நீரகப் பிரிவில் இன்புலுன்ஸா வைரஸ் உடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் உள்ளதாக சுகாதார அமைச்சின் குழுவினர் 11-01-2017 கண்டி வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்கள் இது தொடாபாக கண்டறிந்துள்ளனர்.

சிறு நீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் ஆறு பேருக்கு இன்புலுன்ஸா நோய் அறிகுறிகள் குறைவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்தநாயக கருத்துத் தெரிவிக்கையில்;

உயிரிழதுள்ள மூவரில் அதில் இருவர் இன்புலுன்ஸா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணர் ஜோர்ச் ஜயமஹ, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் என் வசி சமரவீர ஆகியோர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து விசேட பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிறு நீரக நோய் தொடர்புடையவர்கள் இரு பெண்களை இரத்தம் பரிசோதனை செய்த போது அதில் ஒருவருக்கு இன்புலுன்ஸா உள்ளதாக சந்தேகிக்கின்றனர். சிகிச்சைக்காக நோயளர் வேறுபடுத்தி வைக்கப்பட்டுள்ளார். இது தொற்று நிலைக்கு ஏற்ற வகையில் உள்ளதென சகல வைத்தியர்கள், மற்றும் தாதிமார்கள் குழுவினர் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையைக் கருத்திற் கொண்டு சிறார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு வருக் கூடியவர்களை தடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கண்டி பிரதான வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவில் விசேட பிரிவொன்று ஆரம்பித்து சந்தேகக்கிடமான நேயாளர்களைப் பரிசோதனைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளர்களைப் பார்ப்பதற்காக வருகை தருவோர்கள் வாய் மூக்கு கவசம் உறை அணிந்து வருமாறு வைத்தியதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -