நேற்று கொழும்பில் நடைபெற்ற வில்பத்து விவகாரம் தொடர்பான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
நேற்றைய கலந்துரையாடளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீனோ அல்லது அவர் சார்பாக யாராவது அழைப்பு விடுத்திருந்தாலோ அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பேன். ஏனெனில் இது முஸ்லிம்களின் பிரச்சினை என்பதால் எங்களது பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு சமூகத்துக்காக முதலில் சிந்திப்பதே மனிதத்தன்மையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தான் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த வில்பத்து விடையம் தொடர்பாக கடந்த முதலாம் திகதி அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன் அவர்களை நேரடியாக ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். dc