நமது கட்சிப்பணியில் உங்களது பங்களிப்பு அதிகமானாலும்,போராளிகள் வரிசையில் உங்களைப் போன்றவன் என்ற வகையிலும் அட்டாளைச்சேனை முன்னாள் உனைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் என்ற வகையிரும்,அட்டாளைச்சேனை மண்ணைச் சேர்ந்தவன் என்ற வகையிலும் இம்மடலை எழுதுகின்றேன்.
ஒரு இயக்கத்தின் வளர்ச்சியானது அதன் தலைமத்துவதினதும் அதன் போராளிகளினதும் விட்டுக்கொடுப்பில் மாத்திரமன்றி,போராளிகள் போராளிகளுக்கிடையில் விட்டுக்கொடுப்பை மேற் கொள்வதிலுமே தங்கியிருக்கின்றது.
இறுதிக் கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கதுதிடம் இவ்வாறான நிலைப்பாடு இல்லாமல் போனமையே அவ்வியக்கம் அழிக்கபுபட்டு விட்டமைக்கு காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
விடுதலைப் புலகள் இயக்கத்துக்கு நேர்ந்த கதி எமது கட்சிக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதுதான் தலைவரினதும்,உங்களினதம் என் போன்ற போராளிகளினதும் நிலைப்பாடாகும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அரசியல் அதிகாரமுடையவராகவோ இருக்கக் கூடாது என நான் ஒரு போதும் கூறமாட்டேன். ஆனால்,கட்சியையயும் தலமத்துவத்தையும் பணயக் கைதியாக்கி அரசியல் கதிரையை அடைய நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.தலைமத்துவம் விட்டுக் கொடுப்பை மேற் கொள்ளுகின்ற போது உங்கள் மீதும் விட்டுக் கொடுப்பு கடமையாக இருக்கின்றது.
இந்தக்கட்டத்தில்,விடாப்பிடியாகவோ அல்லது பலவந்தப்படுத்தியோ அல்லது அச்சுறத்தியோ பாராளு மன்றப்பதவியை பெற்றுக்கொள்வீர்களாயின் :
01.நிந்தவூர் மீது அட்டாளைச்சேனை வைத்திருக்கின்ற மிக நீண்டகால உறவை இழக்கச்செய்யப் போகின்றீர்கள.
02. போராளிகளின் அபிமானத்தை இழக்கப்போகின்றீர்கள்.
03.தொகுதிவாரித் தேர்தலில் நிந்தவூருக்கு அட்டாளைச்சேனையின் வாக்கு தேவையில்லாமல் செய்யப்போகின்றீர்கள்.
05.அட்டாளைச்சேனையில் உங்கள் கரங்களால் மரத்தை வெட்டப் போகின்றீர்கள்.
இவற்றுக்கெல்லாம் பாத்திரவாளி ஆகிவிடாமல் விட்டுக்கொடுங்கள்.