கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கு முதலமைச்சரால் வாகனங்கள் வழங்கிவைப்பு..!

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் காத்தான்குடி நகரசபை, பிரதேச சபைகளான அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு நேற்று (07.01.2017) காத்தான்குடி நகரசபையிலும், ஓட்டமாவடி பிரதேச சபையிலுமாக இடம்பெற்றன. நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கெளரவ அதிதியாக மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.ஹமீட் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்ரவேல் ஆகியோருடன் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -