விரைவில் தமிழக முதல்வராக சசிகலா..?

சிகலா விரைவில் தமிழக முதல்வராவார் என மாநில அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் குறித்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, செய்தியாளர்களிடம் கருத்துத்தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்த சசிகலா அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொண்டர்களை கட்டிக் காக்கும் உன்னதமான பொறுப்பை சசிகலா ஏற்றுள்ளார் எனத் தெரிவித்த அவர், அ.தி.மு.க.வினர் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் சிறந்த உரையை சசிகலா ஆற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அவரது தலைமையின் கீழ் அ.தி.மு.க மேலும் சிறப்பான வளர்ச்சியடையும்,தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர் என்றம் அதை ஏற்று விரைவில் அவர் முதல்வராக மக்கள் பணியாற்றுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -