விசாரணைக்கு வருகிறது பௌசியின் வழக்கு

அரச வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05, 06 ஆம் திகதிகளில் விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரால் இவ்வாறு தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வாகனம் நெதர்லாந்து அரசால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு வழங்கப்பட்டதாகும். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சர் அவ்வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதால் அரசாங்கத்துக்கு பத்து இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ் வழக்கு நேற்று (23)விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அமைச்சர் ஏ. எச். எம். பவுசி நீதிமன்றில் சமூகமளித்திருக்கவில்லை. சுகயீனம் காரணமாக அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

தவறாகப் பயன்படுத்திய வாகனம் சுற்றுநிரூபத்துக்கு ஏற்றவாறே அமைச்சரால் பயன்படுத்தப்பட்டதாக சட்டத்தரணிகள் கூறினர். அதன்படி குற்றச்சாட்டு தொடர்பாக மீண்டும் விசாரிக்குமாறு அவர்கள் இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிடம் கோரியுள்ளனர். ஆனால் குற்றம் உண்மையா? பொய்யா என்பது வழக்கை விசாரித்து சாட்சிகள் மூலம் உறுதிசெய்யப்படும் என்றும் அதனால் வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்று நீதிமன்றம் கூறியுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -