அட்டாளைச்சேனைபிரதேச பாலமுனை வைத்தியசாலைக்கு ஏன் இந்த அவலநிலை

பாலமுனை முபீத்-

ரு ஊரின் பிரதானமாக மூன்று விடயங்கள் சீராகவும் திருப்தியாகவும் நடைபெற வேண்டும். அந்த வகையில் பாடசாலை, வைத்தியசாலை, பள்ளிவாயல் போன்றவைகளே அந்த மூன்றும்.

பாலமுனையைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக இவைகள் மூன்றினுமுடைய நிருவாகக் கட்டமைப்பும், சேவைகளும் மேட்டுக்குடி வர்க்கத்தினரால் தொடர்ச்சியாக ஆளப்பட்டு சேவைகளும், கடமைகளும் சீராக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்

அண்மையில் ஏதோவொரு வகையில் பாடசாலையினதும், பெரியபள்ளிவாயலினதும் நிருவாகம் மாற்றப்பட்டு துரிதமாக சேவைகளும், கடமைகளும் நடைபெறுகின்ற போதிலும் மிகவும் முக்கியமான மற்றொரு சேவை நிறுவனமான வைத்தியசாலை சீர்கெட்டுச் செல்வதனை அவதானிக்க முடிகிறது.

பாலமுனை வைத்தியசாலையினுடைய அபிவிருத்திக்கும் அதனுடைய நியாயமான சேவைக்கும் போதியளவுக்கு கைகொடுப்புக்கள் இல்லை என்பதால் வைத்தியசாலை பின்னோக்கிச்செல்வதால் பாலமுனை மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அரசியல்வாதிகளாலும், சுகாதார அதிகாரிகளாலும் பாலமுனை வைத்தியசாலை இருட்டடிப்பு செய்யப்படுவதற்கான யூகிக்கக்கூடிய காரணங்களையும் கூறலாம்.

அரசியல் பின்புலங்களை மனதில் வைத்துக்கொண்டு தனி நபரை அல்லது தனிக்குழுவை பழிவாங்கும் நோக்கில், அல்லது தங்களுடைய ஊர் வைத்தியசாலைகளின் தரம் உயர்த்தலுக்கும், அதனுடைய அபிவிருத்திகளை பெருகச்செய்வதற்குமாக பாலமுனை வைத்தியசாலையயை மிதித்து நடக்கக்கூடிய சூழலை உருவாக்குதுமாகவும் இருக்கலாம்.

இவற்றின் பிரதிபலிப்பாகத்தான் பாலமுனை வைத்தியசாலையை அபிவிருத்தியோ, சேவையோ சிறப்பாக நடக்கக்கூடாது என்று எண்ணுகின்ற துடிப்பில்லாத தாதிமார்களை தடுக்க முயற்சித்தும் அரசியல் அதிகாரங்களை எதிர்க்க முடியாமல் அவர்கள் நியமிக்கப்பட்ட வரலாறும், 22 சிற்றூழியர்கள் கடமைபுரிந்த பாலமுனை வைத்தியசாலையில் இன்று 11 பேர் மாத்திரமே கடமை புரிகின்ற நிலமையும், நோயாளிகளுக்கு நம்பிக்கையற்று வெளியூர்களுக்கு நாடி சிரமங்களை தேடக்கூடிய சூழ்நிலையும் ஆகும்.

ஊர்ப்பற்று என்பதை அயலூர்களிலிருந்து கடமை புரிகின்றவர்கள் மீது திணிக்கமுடியாது என்பது யதார்த்தம். அவ்வாறான யதார்த்தத்தின் மீது ஏற்படுத்தப்படுகின்ற கேள்விகளுக்கு முரண்பாடுகள் தான் தீர்வாகிறது.

ஊர்மக்களும், ஊர்த்தலைவர்களும் ஒற்றுமைப்படவேண்டிய காலகட்டத்தில். எமது பாலமுனை வைத்தியசாலை மாத்திரமல்ல, பாலமுனையினுடைய ஒட்டு மொத்த அபிவிருத்தியையும் முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எம்மை முட்டாள்களாக்கி பிரதேசவாதங்களை தொடுத்து ஏமாற்றக்கூடிய அரசியல் அதிகாரங்களை உடைத்தெறிந்து நமக்கான அபிவிருத்தியையும், சேவைகளையும் ஊருக்கும் வைத்தியசாலைக்கும் பெற்றெடுக்க வேண்டும்.

தரமற்ற தாதிமார்களை மாற்றி ஊர்ப்பற்று உள்ள ஊர்த்தாதிமார்களை நியமிக்கவும், பழைய கட்டிடங்களுக்கான தீர்வினையும், போதாமையிலுள்ள ஊழியர்களை நியமிக்கவும் என சுகாதார அமைச்சர்களிடமும். சுகாதார அதிகாரிகளிடமும் பாலமுனை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -