முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும் - யூ.கே.நாபீர்

நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் அசாதரணமான நிலைமைகளைக் கருத்தில்கொண்டும் காலத்தின் தேவைகருதியும் முஸ்லிம் தலைமைகள் தங்களுக்கிடையே உள்ள குறுகிய அரசியல் போட்டிகளைக் கைவிட்டு உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என்று நாபீர் பவுண்டேஷனின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அல்- ஹாஜ். யூ.கே. நாபீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

வெளிவரவுள்ள புதிய எல்லை நிர்ணயத்திலும் சரி வரவுள்ள புதிய அரசியலமைப்பிலும் சரி முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் நியாயம் கிடைக்க வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாகவும் இவ்வாறான சூழலில் முக்கிய தீர்மானங்கள் கூட்டாக எடுக்கவேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் தங்களுக்குள் குழுக்களாக பிரிந்துகொண்டு சண்டையிடுவதும், சாணாக்கியம் என்றும் சத்தியம் என்றும், தங்களது தலைவர்களுக்கு மகுடம் சூட்டி, அவர்களது குறைகளை சுட்டிக்காட்டாது அவர்களை சரியான வகையில் வழிகாட்டாது இன்னும் பகைகளை வளர்த்து, தேசிய ரீதியாக உள்ள சவால்களை கவனியாது இவர்களே மோதிக்கொள்ளும் நிலைக்கு தங்களது தலைவர்களை அவர்களது தொண்டர்கள் வைத்திருப்பது மிகக்கவளையான விடயமாகும்.

எல்லை நிர்ணயத்தில் தெஹியத்தைக்கண்டிக்கு ஒருநீதியும், சம்மாந்துறைக்கு ஒருநீதியும் என்ற அடிப்படையில் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைப்பிரிப்பிலும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்துகள் வெளிவந்துள்ள நிலையிலும், காலம்காலமாக மருச்சிகட்டியில் வாழ்ந்துவந்த மக்களது காணிகளை வனம் வளக்கிறோம் என்ற பெயரில் வளைத்துப்போடும் நிலையும், முஸ்லிம்களுக்காகவே கட்டப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை இன்றுவரை அந்த மக்களுக்கு கொடுக்காது அநீதியிளைப்பதும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை குடியேற்றுவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காதிருப்பதும் அத்துடன் நின்று விடாது தீவிர பௌத்த துறவிகள் முஸ்லிம்களை நோக்கி இலங்கையில் இன்னுமொரு மியன்மாறை உருவாக்க முயற்சிக்கும் நிலையென பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்ற இந்தசந்தர்ப்பத்தில் எதிர்கால முஸ்லிம் சந்ததிகளின் நின்மதியான வாழ்வுக்கு இனியாவது சரியான அத்திவாரமிடப்பட வேண்டும் அது இப்போது பிரிந்திருக்கும் அரசியல்வாதிகள் ஒன்றுபடுவதினூடாகவே சாத்தியப்படும் என்றும் பொறியியலாளர் யூ.கே.நாபீர் தெரிவித்துள்ளார்.

சாணாக்கியம் என்றும் சத்தியம் என்றும் கூப்பாடு போடுபவர்கள் அவர்களை சமூகத்துக்காக இணைந்து செயற்பட வேண்டிய ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பிலும் எல்லை நிர்ணயம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளிலும் தலைவர்கள் என கூறித்திரிபவர்கள் சரியான ஒற்றுமையான தீர்மானங்களை எடுக்காது விடுவார்களானால் நிச்சயமாக எதிர்கால சந்ததிகள் முன்னிலையில் இவர்கள் குற்றவாளிகளாகவே பேசப்படுவார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமானிதத்தை அவர்கள் சரியாக கொண்டுசெல்ல குறுகிய அரசியல் சிந்தனைகளைத் தவிர்த்து ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுவதாகவும் தனது ஊடக அறிக்கையில் நாபீர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -