ஹிங்குராண சீனித்தொழிற்சாலை கலைக்கப்படவுள்ளது..?

காரைதீவு நிருபர் சகா-
ல்லாண்டுகாலம் பழைமைவாய்ந்த அம்பாறை ஹிங்குராண சீனத்தொழிற்சாலை கலைக்கப்பட தீர்மானிக்கப்படவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின்கீழள்ள வரையறுக்கப்பட்ட ஹிங்குராண சீனித்தொழிற்சாலை முற்றுமுழுதான ஓர் அரசாங்க நிறுவனமாகும்.

இந் நிறுவனம் கலைக்கப்படும்போது அதன் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் சொத்துச்சுவீகரிப்பு கடன் மற்றும் பொறுப்புக்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென ஒரு கலைப்பாளரை நியமிக்க கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

தகுதியானவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கமுடியும். விபரங்கள் தேவையாயின் 20.01.2017க்கு முன்னர் 011-2368280 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டுபெறமுடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -