அதன்போது செயலாளர் நாயகம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்த்து உயர்பீட உறுப்பினர்கள் கூடியிருந்தாலும் கூட்டம் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பக்கம் திசை திரும்பியிர்ந்தது.
இதன்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் விட்டுக்கொடுக்காது அட்டாளைச்சேனைக்கே தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிக்கைவிட்டதுடன் ஒவ்வொரு உயர்பீட உறுப்பினர்களும் நானே தேசியப்பட்டியலை எடுக்கும் தகுதியுள்ளவன் என்றும் தெரிவிக்கத் தவறவில்லை.
அதன்பிறகு சாய்ந்தமருதைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர் பிர்தெளஸ் பேசுகையில் ஹஸன் அலி சேர் நீங்களாக முன்வந்து அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்க முன்வரவேண்டும் அப்போதுதான் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் தப்பான அபிப்பிராயம் நீங்கும் என்று தெரிவித்தார்.
அதன்பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் ரஷாக் கருத்துத் தெரிவிக்கையில்:
கட்சியின் செயலாளர் ஹஸன் அலி தொடர்பில் எடுக்கும் முடிவால் அட்டாளைச்சேனையை புறக்கணிக்க முடியாது.
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கவேண்டும் என்று தலைவர் கட்டாய வாக்குறுதியளித்துள்ளார் எனவே அதனை மறுக்க முடியாது வழங்க வேண்டும். ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கும்போது மக்களுடன் சேர்ந்து மக்களாக அரசியல் செய்யும் ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் கல்முனை ஜவாத் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இப்போது வழங்கத் தேவையில்லை என்று உயர்பீடத்தில் கூறியதாக வந்திருக்கும் செய்தி தொடர்பில் இம்போட்மிரர் செய்திப் பிரிவு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ரசாக்கை தொடர்பு கொண்டு கேட்டபோடு இவ்வாரு தெரிவித்தார்.
இம்போட்மிரர்: மாகாணசபை உறுப்பினர் அவர்களே நீங்கள் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் இப்போது கொடுக்கத் தேவையில்லை என்று கூறியதாகத் தகவல்கள் வந்துள்ளன இது தொடர்பில் என்ன கூறவிரும்புகிறீர்கள்.
ரஷாக் ஜவாத்: நானும் கேள்விப்பட்டேன் மோசமாக யாரோ எழுதியுள்ளதாக..
மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களும் சற்று முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.. ஜவாத் நீங்கள் நன்றாகத்தானே பேசினீர்கள் ஏன் உங்களைப் பற்றி தப்பாக எழுதியுள்ளார்கள் என்று தவம் கூட என்னிடம் கவலையுடன் கேட்டார். ஆனால் இந்த சதிவேலையை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும் ஆனால் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இம்போட்மிரர்: அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்பது தொடர்பில் உங்கள் கருத்தினைக் கூறுங்கள்
ஜவாத் ரஷாக்: நான் தேசியப்பட்டியல் எனக்கு ஒருபோதும் கேட்கவில்லை கேட்கவும் மாட்டேன். ஆனால் அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விடயத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
தலைவர் வாக்களித்தபடி கட்டாயம் கொடுக்க வேண்டும். அதன்மூலம் ஊரில் பல சேவைகள் நடைபெறவேண்டும் கட்சி வளர வேண்டும். எனவே மக்களுடன் இருந்து அரசியல் செய்யும் ஒருவருக்கு தேசியப்பட்டியலை வழங்குங்கள் என்று நானே உயர்பீடக் கூட்டத்திலேயே கூறிவிட்டேன்.
இம்போட்மிரர்: செயலாளர் நாயகம் ஹஸன் அலி தொடர்பில் உங்கள் கருத்து என்ன..?
ரவாத் ரஷாக்: செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களுக்கு சரியான பதவியைக் கொடுத்தால் அவருக்கு MP பதவி கொடுக்கத் தேவையில்லை.
ஆனால் செயலாளர் நாயகம் என்னும் முழுமையான பதவியை அவருக்குக் கொடுத்தல் நன்று. ஏன் என்றால் இன்று கட்சியில் அவரை விட முழுமையான சிந்தனையில் சமூக சிந்தனையுடன் நடந்து கொள்ளும் ஒருவரைக் காண்பது அரிது. அவர் கட்சிக்காக பல தியாகம் செய்தவர் எனவே அவரைப் புறந்தள்ளிவிட முடியாது.
இம்போட்மிரர்: நீங்கள் அட்டாளைச்சேனையை எதிர்ப்பதாக வந்திருக்கும் செய்தி தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்.
ஜவாத் ரஷாக்: நான் அட்டாளைச்சேனையையோ மக்களையோ ஒருபோதும் எதிர்க்கவில்லை எதிர்க்கவும் மாட்டேன். ஒருவிடயத்தை முகத்தில் கூறிவிடும் கொள்கையுள்ளவன் நான். எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ ஒருவர் பொய்யான தகவலை மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார் அவரை யார் என்று நான் மக்களுக்குத் தெரிவிப்பேன். ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதனை தலைவருக்கு நானும் சரியான முறையில் எடுத்துக் கூறியிருக்கிறேன்.
நான் உயர்பீடக் கூட்டத்தில் பேசியதனை வீடியோவாக இம்போட்மிரருக்கு விரைவில் வழங்குவேன் என்று தெரிவித்தார்.