ஜல்லிக்கட்டு எழுச்சி, தமிழரின் தன்மான புரட்சியாக மாறியுள்ளது -மனோ

ல்லிகட்டு தடையை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவே உலகம் முழுக்க வாழும் தமிழர் பார்க்கிறார்கள் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன்

ஜல்லிக்கட்டு தடையை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவே உலகம் முழுக்க வாழும் தமிழர் பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு எழுச்சி, தமிழரின் தன்மான புரட்சி என்பதை இந்திய அரசு புரிந்துக்கொள்ள வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் மெரீனா கடற்கரையை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு தொடர்பான அமைதி போராட்டத்தை பற்றிய கருத்துகளை தனது முகநூல், டுவீட்டர் தளங்களில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் மிருக வளர்ப்பு, தோலுக்காக மிருகங்களை வேட்டையாடுவது, தந்தத்துக்காக யானைகளை கொல்வது, பிராணிகளில் நிகழ்த்தப்படும் பரிசோதனைகள் என்ற வரிசையில் ஜல்லிக்கட்டை பார்க்க கூடாது. அப்படியானால் உலகில் மாமிச உணவை தடை செய்ய வேண்டும். மிருககாட்சிசாலைகளையும் மூடிவிட வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு தூக்கி எறியும் போதும், அந்த தீர்ப்பு வலியுறுத்தும் தேவைப்பாட்டை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை கலவரம் நடைபெறும் போதும் வராத கோபம், இப்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை மாற்றி எழுது என்று அமைதியாக போராடும் தமிழக மாணவர்களை பார்த்து வருவது எப்படி என்ற தமிழ்நாட்டு மக்களின் கேள்வியில் நியாயம் இருப்பதை மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உருவாகி இன்று தென் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் மாட்டுச்சண்டை (BULLFIGHT) என்பதற்கும், ஜல்லிக்கட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை “பீடா” (PETA) போன்ற விலங்குரிமை அமைப்புகள் புரிந்துக்கொண்டு, அவசியமானால் புதிய நெறிமுறைகளை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். ஜல்லிக்கட்டை இன்னமும் நெறிப்படுத்தி, காளைகளுக்கு துன்பம் விளைவிக்கப்படக்கூடிய உத்தேச சந்தர்ப்பங்களுக்கு எதிராக முன்னர் உருவாக்கப்பட்ட விதிகளை இன்னமும் நவீனப்படுத்தி அமுல் செய்து, ஜல்லிக்கட்டை அனுமதிப்பதையே இன்று இந்திய அரசு செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களின் மூலம் தகவல்களை உடனுக்குடன் பெறும் உலக தமிழர்கள், இன்று ஜல்லிக்கட்டு சாத்வீக போரில் குதித்துள்ள தமிழக மாணவர்களை, தன்மான தமிழ் சின்னங்களாக பார்க்க தொடங்கி விட்டார்கள் என்றும், ஜல்லிக்கட்டு என்ற விவகாரம், இன்று உலகெங்கும் தமிழரின் தன்மான புள்ளி ஆகிவிட்டது என்றும், ஆகவே அதில்கைவைப்பவர்கள், யாராயினும் இனி கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் சமூக ஊடக தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -