பூசைக்குச் சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவிப்பு.!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் அண்மைக்காலமாக புத்தர் சிலைகள் உடைக்கப்ட்ட நிலையில் பெரும்பான்மையினத்தவர்கள் மத்தில் இன நற்புறவை வளர்க்கும் நோக்கில் செயற்பட்ட மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.பீ.என்.குலதுங்க நேற்று மாலை (14) பன்குளம் மக்களால் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

தைப்பொங்கள் தினமான சனிக்கிழமை மாலை பன்குளம் பிரதேசத்திலுள்ள பளம் வாய்ந்த அவ்வைநகர் சிறி முத்துமாறியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூசை வழிபாட்டில் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மொறவெவ பிரதேசத்தில் கடந்த 08ம் திகதி இடம் பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் தோன்றிய வேளையில் இவ்வாறான பூசை வழிபாட்டல் ஈடுபடுவது தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பையும் மத வழிபாட்டை கௌரவிக்கும் செயற்பாடாகும் என கூறி முதலிக்குளம் 05ம் வாய்க்கால் விசவாய சங்கத்தினால் பொண்ணாடை போர்த்தி மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.பீ.என்.குலதுங்க கௌரவிக்கப்ட்டார். இதில் அவ்வைநகர் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -