புல்மோட்டை விளையாட்டு கழகங்களுக்கும் பள்ளிவாசலுக்கும் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

புல்மோட்டை மற்றும் நிலாவெளி பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணமும் மிஸ்பாஹுல் ஹுதா பள்ளிவாசலுக்கு ஒரு தொகை கதிரைகளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் 2016 ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து:-

புல்மோட்டை அரபாத் விளையாட்டு கழகத்திற்கு ரூபா 50,000/- பெறுமதியான சப்பாதுகாக்கள்

புல்மோட்டை எலெவன் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு ரூபா 30,000/-

புல்மோட்டை ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு ரூபா 50,000/-

புல்மோட்டை நூரானியா விளையாட்டு கழகத்திற்கு ரூபா 40,000/-

புல்மோட்டை மிஸ்பாஹுல் ஹுதா பள்ளிவாசலுக்கு கதிரைகள் ரூபா 50,000/-

அல் ஹிக்மா விளையாட்டு கழகத்திற்கு கதிரைகள் ரூபா 50,000/-

நிலாவெளி அல்பதா விளையாட்டு கழகத்திற்கு சப்பாத்துக்கள் ரூபா 25,000/-

போன்றன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு வருடகால பூர்த்தியை முன்னிட்டு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 08.01.2017 வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக், இணைப்பாளர் பலில், குச்சவெளி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலகத்தின் அணைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதுடன் விளையாட்டு கழக வீரர்களும் கலந்து கொண்டு பொருட்களை பெற்றுக்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -