ஊடகவியலாளர்களை அவமதிக்கும் மட்டு அரசாங்க அதிபரின் காரியாலயம்..!


ட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களை கண்டுகொள்வதில்லை புறக்கணிக்கிறார் என்று பரவலாக பலர் முகநூல்களில் எழுதியுள்ளமையை நோக்கியிருந்தாலும் நேரடியாக அங்கு ஒரு நிகழ்வுக்கு சென்றபோதே அதன் சரியான உண்மை தெளிவானது.

மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்கு வரும் அதிதிகள் அதிகாரிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்குவது போன்று ஊடகவியலாளர்களுக்கும் தனியாக ஆசனங்கள் போட்டுவைப்பது ஏனைய இடங்களில் வழக்கமாகவுள்ளன.

ஆனால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயமோ இதில் மிகவும் வித்தியாசமான முறையில் ஊடகவியலாளர்கள் யாருக்கும் தேவையற்றவர்கள்போல் அவமதித்து நடந்து கொள்கிறார்கள்.

உதாரணமாக வழமையாக அங்கு நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களுக்கு வரும் ஊடகவியலாளர்களுக்கு இருப்பதற்கு கதிரைகளோ குடிக்க குடிபானங்களோ குறைந்தது குடிநீர் போத்தல்களோ வழங்காமல் அவமதிப்பது கண்டிக்கத்தக்க விடயம்.

நீண்ட நேரம் அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அதிதிகளுக்கு குடிபானங்கள் பகிர்வதும் ஊடகவியலாளர்களை வேண்டாதவர்களாக விட்டுச்செல்வதும் கடும் கண்டிப்புக்குரிய விடயம்.

கடந்த வாரம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கிழக்கு முதலமைச்சருடன் விவசாய அமைச்சர் அரசாங்க அதிபர் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு முன்னறிவித்தல் கொடுத்தும் குடிநீர் போத்தல்கூட கொடுக்காமல் விட்டது யாருடைய பிழை.. இது சம்மந்தமாக அங்கு பணிபுரிவோரிடம் கேட்டபோது அரசாங்க அதிபர் உத்தரவில்லாமல் குடிநீர் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

(குடிநீர் போத்தல் பெற முடியாதவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள் இது சுட்டிக்காட்டலுக்காவே)

இது இவ்வாறு தொடர்ந்தால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெறும் கூட்டங்கள், நிகழ்வுகள் எதுவானாலும் எந்த ஊடகவியலாளர்களும் செல்லாது புறக்கணிக்க வேண்டிய நிலமை ஏற்படுவதுடன் அவமதிப்பதன் பிண்னனி யார் என்று அறிந்து மோசமாக அறிக்கை வெளியிடவும் வேண்டி வரும் என அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

அத்துடன் ஊடக அடக்குமுறையில் இப்படியான அவமதிப்புக்களும் ஒன்றாகும்

ஊடகவியலாளர்களுடன் நல்லுறவைப் பேணமுடியாமல் அட்டகாசமாக நடந்து கொள்ளலாம் என்று நினைக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊடகம் அதன் கடமையைச் செய்ய நீண்ட காலம் எடுக்காது என்பதனை இப்படியானவர்கள் தெரிந்து கொண்டு செயல்படுதல் நன்று என நினைக்கிறேன்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஊடகவியலாளர் கருத்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -