இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் விசமப்பிரச்சாரங்களை தடுக்கவும், பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்களுக்கெதிரான நடவடிக்கைக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், மாகாணசபை ஆகியவற்றில் இருக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களைச் சந்தித்து நாட்டில் ஏர்பட்டுள்ள நிலமைகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் செய்ய மாகாணசபை உறுப்பினர்களின் நல்லுறவுக்காகவும் அவர்களுடனான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் பொறுப்பினை பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மெளலானா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனூடாக ஒற்றுமையாக கருத்துப் பரிமாற்றல் செய்வதன் மூலம் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெளியாகும் விசமக் கருத்துக்களுக்கு மக்கள் மன்றங்களின் மூலம் தீர்வுகாணவும் ஜனாதிபதியைச் சந்தித்து எடுத்துக்கூறவும் தீர்மாணிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -