உயரம் குறைந்து விட்டதா எவரெஸ்ட்? அளக்கும் பணியில் இந்தியா!

நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாயின. கடும் மண்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தத்தால் நேபாளத்தின் சில பகுதிகளின் மண்ணில் புதையுண்டபோதும், சில பகுதிகளின் உயரம் சுமார் 30 அடி வரை அதிகரித்திருப்பதாக செய்மதிகள் அனுப்பியுள்ள படங்களில் இருந்து தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தால் உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் சுமார் ஒரு அங்குலம் குறைந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, மலையேறும் வல்லுனர்கள் குழுவொன்றைப் பயன்படுத்தி எவரெஸ்ட்டின் உயரத்தை அளவிட இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்தக் குழுவில் தொழில் ரீதியான மலை ஏறும் வீரர்களுடன் இந்திய மத்திய வரைபட அமைப்பின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சிலரும் பங்கேற்றுள்ளனர். இவர்கள் எவரெஸ்ட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து சென்று சிகரத்தின் உயரத்தை அளவிடுவர். அதில் மிக உயரமாக உள்ள பகுதியையே உத்தியோகபூர்வமான உயரமாக அறிவிப்பார்கள். இதற்காக ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் செய்மதிகளின் உதவியும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக சுமார் ஏழு இலட்சம் டொலர்கள் செலவிடப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் இந்த முயற்சியை அனுமதிக்கப்போவதில்லை என நேபாளம் தெரிவித்துள்ளது. இதே பணியை தனது வல்லுனர்கள் குழுவொன்று ஆராயும் என்றும் நேபாளம் தெரிவித்துள்ளது.

1955ஆம் ஆண்டு இந்திய அளவீட்டின்படி எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீற்றர் - அதாவது சுமார் 29 ஆயிரம் அடியாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

1999ஆம் ஆண்டு அமெரிக்க குழுவொன்று எவரெஸ்ட்டின் உயரம் 8,850 மீற்றர் என்றும், 2005ஆம் ஆண்டு சீனர்கள் குழுவொன்று 8,844 மீற்றர் என்றும் அளவிட்டிருந்தது. எவ்வாறெனினும், உலகின் மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமைக்கு இந்த மதிப்பீடுகளால் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.

எவரெஸ்ட்டுக்கு அடுத்த இடத்தை சீன-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ‘கே2’ என்ற மலை பிடித்திருக்கிறது. இதன் உயரம் 8,611 மீற்றர்கள் மட்டுமே!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -