"தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்களின் அவிழ்க்கப்பட்ட சில முடிச்சுக்கள்"

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற முகவரி அற்ற மொட்டைக்கடதாசி எழுதுபவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவு செய்யப்படாத புத்தக வடிவிலான ஆக்கத்தைப் பற்றி எனது சிறு கருத்தை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன் உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் சொந்த பெயரில் இந்த புத்தகத்தை வெளியிட்டிருந்திருந்தால் ஓரளவுக்கு மக்கள் நம்பி இருப்பார்கள். கற்பனையில் கவிதை எழுதுவதாக இருந்தாலும் சொந்த பெயரில் தைரியமாக எழுதி இருந்தாலும் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றிருக்கும்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் தாருஸ்ஸலாம் எத்தனை தட்டுக்கள் உள்ளன என்று தெரியாத ஒருவர் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது நகைப்புக்குரியது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள யுனிட்டி பில்டர்ஸ் (பிரைவட்) லிமிடெட் என்ற கொம்பனியுடன் குடும்ப உறுப்பினர்களை தொடர்புபடுத்தியுள்ள சில குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படவேண்டியதுதான் எனினும் இக்கொம்பனியானது தாருஸ்ஸலாத்தை பரிபாலிக்க மட்டும் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும் ஆனாலும் நம்பிக்கை நிதியத்தில் அதிகமான சொத்துக்கள் இருந்தும் தாருஸ்ஸலாத்தை மட்டும் இவர்கள் தூக்கிபிடிப்பதன் மர்மம் என்ன என்ற சந்தேகம் என்னுள் தொக்கி நிக்கிறது.

நம்பிக்கை நிதியம் மற்றும் பரிபாலிக்கும் கொம்பனி ஆகியவற்றுக்கு பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களே சமகாலத்தில் தலைமை பதவி வகித்தார் எனவே அவரின் மறைவிற்கு பின்னர் கட்சியின் தலைவராக யார் இருக்கிறாரோ அவரே அவைகளின் தலைமை பதவியையும் பொறுப்பெடுப்பது நிதர்சனமாகும் இந்த சாதாரண நடைமுரைகூட நூலாசிரியர் தெரியாமல் இருப்பது வேதனை 
நம்பிக்கை நிதியத்தின் பரிபாலன சபையில் இலங்கையில் பிரபல்யமிக்க ஜனாதிபதி சட்டத்தரணியும் சமூகத்தின் கட்சி சாராத முக்கியஸ்தர் ஒருவருமான பாயிஸ் முஸ்தபா அவர்கள் இடம்பெற்று இருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும் ஏன் இவரால் இவ்வளவு காலமும் இந்த களவுகளை வெளிக்கொணர முடியாமல் போனது அப்படியானால் இவரும் இந்த விடயங்களுக்கு இங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தாரா..!!

லீடர்ஸ் ஒப்ளிகேட்டரி டரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடட்டிட்டி (லோட்டஸ்) என்ற நம்பிக்கை நிதியத்தில் இன்று கட்சியோடு உள்ளவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் சல்மான் ஆகியயோர் தலைவர் அஸ்ரபாலேயே நியமிக்கப்ட்டவர்கள். நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர்கள் வரிசையை நோக்கும் போது பெருந்தலைவர் இன்றுள்ள இவ்விரண்டு பேர்களுக்கும் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை இன்று புத்தகம் வெளியிட்டுள்ளவர்களின் பின்னால் உள்ளவர்கள் அறியாமல் இருப்பது சிறுபிள்ளைத்தனம் என்றே சொல்ல வேண்டும்.

பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் கூட தாருஸ்ஸலாம் கட்சியின் அலுவலகமாக செயற்படவில்லை அத்தோடு தலைவரின் அகால மரணத்தை தொடர்ந்து செயற்படாமல் இருந்த நம்பிக்கை நிதியத்தை செயற்படுத்துவதற்கான ஆக்க பூர்வமான ஏதாவது ஆலோசனைகளை நூலாசிரியர் முன்வைத்திருந்தால்கூட ஏற்றுகொண்டிருக்கலாம். 
இன்று தாருஸ்ஸலாத்திற்கு பக்கத்தில் இருக்கும் வளவு கூட கபளீகரம் செய்யப்பட இருந்த வேளையில் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களால் கட்சியின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது இதை அவருக்கோ அவர் சார்ந்த குடும்பத்தவர்களுக்கோ அவரின் நண்பர்களுக்கோ மாற்ற தெரியாமல் போய் இருக்குமா அப்படி எங்காவது இருந்திருந்தால் உறுதியான ஆதாரம் எதையாவது சமர்பித்து இருக்கலாம்.

நம்பிக்கை நிதியத்தில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இன்று கட்சியில் இல்லை சிலர் மரணித்தும் விட்டார்கள் சிலர் வெளிநாடுகளில் குடியேறியும் விட்டார்கள் எனவே இந்த பிரச்சினையோடு சம்பத்தபட்டவர்களான பேரியல் அஷ்ரப், அமான் அஷ்ரப், பாயிஸ் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், சல்மான், நசீர் அஹமட் ஆகியோரில் மூன்றுபேர் மட்டுமே இன்று கட்சியில் இருக்கும் சூழ்நிலையில் நம்பிக்கை நிதியத்தின் சொத்தாக இருகின்ற தாருஸ்ஸலாத்தை கட்சியின் சொந்த கட்டிடமாக பெற்றுக்கொள்ள இந்நிதியத்தின் நடுநிலமைவகிக்கும் பாயிஸ் முஸ்தபா மூலம் பேரியல் அஷ்ரபுடன் சுமுக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பலதடவைகள் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்பாடுகள் செய்த போதும் நான் அறிந்தவகையில் அவை ஆமை வேகத்திலேயே செயற்படுகின்றது என்றே கூறவேண்டும். 
கொழும்பில் உள்ள தாருஸ்ஸலாத்தை தலையில் தூக்கிபிடிக்கும் நூலாசிரியருக்கு ஏறாவூரில் உள்ள தாருஸ்ஸலாத்தை பற்றி ஆராய நேரம் இல்லாமல் போன வேடிக்கை என்னவோ..!!

தாருஸ்ஸலாத்தை வருமானம் ஈட்டும் மாபெரும் கட்டிடமாக நூலாசிரியரால் பிரம்மை ஒன்று கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆனாலும் உண்மையை இங்கு கடைசியாக கூறவேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது நான் அறிந்த வகையில் இன்று தாருஸ்ஸலாத்தில் உள்ள ஆறு மடிகளில் ஐந்தாவது மாடியில் ஒரு பகுதி மாத்திரமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது அதுவும் அதில் பெறப்படும் நிதிகூட இன்று தாருஸ்ஸலத்தில் உள்ள ஆறு மாடிகளுக்குமான நீர், மின்சார கட்டணம் போன்ற பராமரிப்பு செலவுக்கே போதுமானதாக உள்ளது.

"கட்டிடத்தின் கீழ் மாடி கட்சியின் அலுவலகமாகவும் இரண்டாவது மாடி கேட்போர் கூடமாகவும் மூன்றாவது மாடி கட்சியின் கிழக்கு முதல்வரின் அலுவலகம் மற்றும் தொழுகை அரையாகவும் நான்காவது மாடி வெறுமையாகவும் ஐந்தாவது மாடியில் ஒரு பகுதி மாட்டும் வாடகைக்கும் மற்ற பகுதி வெறுமையாகவும் இருப்பதோடு ஆறாவது மாடி தலைவரின் பிரத்தியோக தங்குமிடமாகவும் கூட்ட மண்டபமாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது."

எனவே பொய்களை சோடிக்கும் போதும் பொருந்தும் வகையில் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -