சர்வதேச சட்டம் சம்பந்தமான கருத்தரங்கில் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்



மெரிக்கா- இலங்கை நாட்டு சட்டத்தரணிகள் சங்கங்கள் இணைந்து நடாத்திய சர்வதேச சட்டம் சம்பந்தமான கருத்தரங்கில் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்

அமெரிக்கா சட்ட அறிஞர்கள் சபையின் அணுசரணையுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து சர்வதேச சட்டங்களில் மனித உரிமைகளையும் சமூக வலைத்தளங்களில், இணையத்தளங்களும் சட்ட வரையறையும் அதன் சுதந்திரமும் எனும் தலைப்பிலான கருத்தரங்கும் பட்டறையும் அண்மையில் கொழும்பிலுள்ள பிரபல்யமான ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு இலங்கையின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மட்டும் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி கருத்தரங்கில்; விசேடமாக அமெரிக்கா, பிலிப்பயின்ஸ் நாட்டு வதிவிடப் பிரதிநிதிகளான அந்நாட்டு சட்டவல்லுனர்களுடன் சட்டத்தரணி கபூர் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -