கிளிநொச்சி மகாவித்தியாலயம் மற்றும் யாழ் பாடசாலைகளுக்கு இஸ்லாம் பாட ஆசிரியர்கள் -டக்ளஸ் தேவாந்தா

ட மாகாணம் கிளிநொச்சி மற்றும் யாழில் வசித்து வரும் முஸ்லீம்கள் பல வளிகளிலும் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக தொடர்ந்தும் தகவல்கள் வந்தவன்னம் இருக்கும் நிலையில் யாழில் இருக்கும் பாடசாலை ஒன்றிலும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களுக்கு சமயக் கல்வியினைக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் இதுவரை நியமிக்க வில்லை என்ற பெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இது தொடர்பாக குறிப்பிட்ட பாடசாலை அதிபரை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது: நாம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம் இதுவரை ஆசிரியகள் நியமிக்க வில்லை என்ற கருத்தினைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது: என்னால் எந்தப் பதிலும் கூறமுடியாது. உங்களுக்குப் பதில் தந்தால் என்னை மேலிடத்தில் விசாரிப்பார்கள் என்று பொடுபோக்காகப் பதிலளித்து தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டார்.

இம்போட்மிரர் ஊடகவலையமைப்பு அநீதி இளைக்கப்படும் மக்களுக்காக முற்று முழுதாக களமிறங்கி சேவையாற்றி வரும் ஒரு இணையத்தளம் என்ற வகையில் இந்த வலயக் கல்விப் பணிப்பாளரின் பொடுபோக்கான கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். யார் அந்த மேலிடம் சரியான பதில்களைச் சொன்னால் கண்டிக்கும் மேலிடம் யார்..? என்பது பற்றிய ஆராய்வு நடந்து கொண்டிருக்கிறது.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவை இம்போட்மிரர் செய்திப் பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த இஸ்லாம் பாடத்துக்குரிய ஆசிரியர் விடயம் குறித்துக் கேட்டபோது. இதுவரை தனக்கு அப்படியான எந்த முறைப்பாடுகளும் கிடைக்க வில்லை இம்போட்மிரர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளீர்கள் நான் உடனடியாக ஆளுணரைத் தொடர்பு கொண்டு இஸ்லாம் பாட ஆசிரியரை நியமிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வேன் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -