மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ள வர்த்தக யூனியன்.



ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
சுமார் இருபது வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் பெரும் நன் மதிப்பினை பெற்று சமூகத்தில் பல கல்விமான்களை உருவாக்கியுள்ள பிர்ளியன் வணிக கல்லூரியானது (Brilliant Business College ) மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் தூர நோக்கு சிந்தனையின்பால் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு வர்த்தக யூனியன் (Batticaloa Commerce Union) எனும் புதிய அமைப்பினை மாவட்ட கல்வி வரலாற்றில் மைற்கல்லாக ஆரம்பித்துள்ளது.,

மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் வர்த்தக பிரிவில் புரட்சியினை ஏற்படுத்தி வரும் வணிக கல்வி ஆசிரியர் கே.கே.அரஸ் தலைமையில் இன்று 01.01.2017 ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு அரசடியிலுள்ள கல்லூரியின் வளாகத்தில் விமர்சையாக இடம் பெற்ற ஆரம்ப நிகழ்விற்கு கல்லூரியின் சிரேஷ்ட்ட தமிழ் கற்பிற்கும் ஆசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் (அமல்) பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததோடு, பிரபல பொருளியல் ஆசிரியரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான எச்.எம்.எம். பாக்கீர் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பெரும்பாலானோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் –இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் எதிர் நோக்கியுள்ள சவால்களுக்கும், பேரினவாத சக்திகளின் உரிமை மீறும் செயற்பாடுகளுக்கும் சிறுபான்மை சமூகம் முகம் கொடுத்து நாட்டில் சுய கெளரவத்துடன் வாழ்வதற்கு தூக்க வேண்டிய ஒரே ஒரு ஆயுதமும் தீர்வும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவதாகும் என தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்.,ஒரு மனிதனுடைய கல்வி மறுக்கப்படுமாயின் அது அவனுடைய உயிரினை பறிப்பதற்கு சமனாகும். அல்லது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கல்வியினை கொடுக்க மறுப்பார்களானால் அது அவர்களினுடைய பிள்ளைகளை கொலை செய்வதற்கு சமனாகும். ஆகவே கல்வி எனும் உரிமை மறுக்கப்படுவதானது உயிரினை பறிப்பதற்கு சமனான விடயமாக பார்க்கப்படுகின்ரது.. சிறுபான்மை சமூகம் இந்த நாட்டில் மீள எழுந்து தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்தில் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரை விடவும், சர்வதேசம் பேசும் அளவிற்கும் உச்ச நிலையினை அடைவதினால் மட்டுமே முடியும். அந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு வர்த்தக யூனியன் (Batticaloa Commerce Union) எனும் அமைப்பு இப்புதிய வருடத்தில் சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அத்தோடு குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு வர்த்தக யூனியன் (Batticaloa Commerce Union) ஆரம்ப நிகழ்வில் சிறுபான்மை சமூகத்திற்காக தூர நோக்கு சிந்தனையுடன் உரையாற்றிய ஆசிரியரும் பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் விரிவான உரையோடு, வர்த்தக யூனியனின் எதிர்கால திட்டங்கள் பற்றிய ஏனைய ஆசிரியர்களின் உரைகள் மற்றும் இடம் பெற்ற நிகழ்வு சம்பந்தமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -