மு.கா வின் தேசிய பட்டியலும், அட்டாளைச்சேனைக்கான நியமனத்திற்குரிய நியாயங்களும்.

சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்-

முஸ்லிம் காங்கிறஸ் தேசிய பட்டியல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை பற்றி அக்கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

அண்மைக் காலமாக மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களிலும் பத்திரிகை, சமூக வலைத்தளங்களிலும் அட்டாளைச்சேனை மக்கள் பற்றி தவறாகவும் தப்புத் தப்பாகவும் அவ்வப்போது அவரவர்கள் விருப்பப்படி விளங்கங்களும் வியாக்கியானங்களும் பிளையாக கொடுக்கப்பட்டிருப்பது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்து கொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றார்.

அதாவது நிந்தவூரைச் சேர்ந்த மு.கா வின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி அவர்களுக்கு இத் தேசிய பட்டியல் இப்பொழுது வழங்கவிருப்பதை அட்டாளைச்சேனை மக்கள் முற்றும் முழுதாக எதிர்ப்பதாகவும் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்பொழுதுதானா? இதனைக் கேட்க வேண்டும் என கேள்விகள் பல தரப்பாலும், எதிகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

இத் தேசிய பட்டியல் பிரச்சினை இன்று நேற்று தோற்றம் பெறவில்லை இற்றைக்கு சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு இக்கட்சி அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்ற முதல் தேர்தலிலே வந்த 1989ம் ஆண்டு அந்த முதல் தேசிய பட்டியலில் எனது பெயர்தான் முதன் முதலாக இருந்து இன்றுவரையும் வந்த இறுதி தேசிய பட்டியலிலும் அட்டாளைச்சேனை மண்ணின் மகனான நான் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களினாலும்; அத்துடன் இப்பொழுதுள்ள தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் வரை அட்டாளைச்சேனையிலிருந்து அடையாளம் காணப்பட்டு இக்கட்சியின் ஆரம்ப, மூத்த முதல் பொதுச் செயலாளராக இருந்து வந்ததினால் எனக்கு வாக்களிக்கப்பட்டது என்பது வரலாறு. இருந்தும் இக்கட்சியின் நலன் கருதி பலருக்கு பல்வேறு காரணங்களுக்காக பல தடவைகள் அந் நியமனம் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது என்பதும் யாராலும் மறைக்கவோ அல்லது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதே நேரத்தில் இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீPம் அவர்கள் எமது பகுதிகளில் நடந்த எல்லா தேர்தல் பிரச்சார மேடைகளிலும் அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் வழங்குவதாக இருந்தால் அதனை முதன் முதலில் அட்டாளைச்சேனைக்குத்தான் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார். எனவே இப்பnழுதுதான் அம்பாறை மாவட்டத்திற்கு இத் தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படும் போது இதனை அட்டானைச்சேனைக்கு தர வேண்டும் என்று எமது மக்கள் தட்டிக் கேட்பதில் எவ்வித தப்போ தவறோ இருப்பதாக தெரியவில்லை என்று நாம் எண்ணுகின்றோம்.

மேலும் சட்டத்தரணி சல்மானுக்கும் சகோதரர் டாக்டர் ஹாபீசூக்கும் இப்பட்டியல் நியமனம் தற்காலிகமாகவே கொடுக்கப்பட்டது என்றும் அத்துடன் திருமலை மாவட்டத்திற்கான எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் கொடுக்கப்பட்ட போது ஏன் இவர்கள் கேட்கவில்லை என்றும் கேட்கப்படுகின்றது. மேற்படி மூன்று நியமனங்களும் அம்பாறை மாவட்;த்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பது எமது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். அதனால்தான் அட்டாளைச்சேனை மக்கள் இவ்வளவு காலமாக அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பது எமது எல்லோரின் கருத்தாகும் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதே நேரத்தில் கடந்த பழைய காலங்களில் நிந்தவூரைச் சேர்ந்த மறைந்த இப்றாகீம் ஹாஜியார், எம்.எம். முஸ்தபா போன்றோர்கள் அப்போது பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட போது இவர்கள் பொத்துவில் நிந்தவூர் பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தலில் நின்றபோதெல்லாம் கொழும்பைச் சேர்ந்த சேர் ராசீக் பரீத், அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம். அப்துல் மஜீத் போன்றவர்களுக்கு எதிராக அட்டாளைசேனையை சேர்ந்த மக்கள் அத் தேர்தல்களில் இந்த நிந்தவூரைச் சேர்ந்த இருவருக்கும் முழு ழுச்சாக நின்று வெற்றிபெற பாடுபட்ட வரலாற்று பழைய சரித்திர சம்பவங்களை இன்றுள்ளவர்கள் தெரிந்திருப்பார்களா? இந்த உண்மைகள் அவர்களுக்கு இன்று விளங்குமா? என கேட்க விரும்புவதாகவும் அவ் அறிக்கையில் மேலும் கபூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மைக் காலங்களில் முஸ்லிம் காங்கிறசிற்கு கிடைத்த தேசிய பட்டியல் பல தடவைகள் எம்.ரீ. ஹசன் அலி அவர்களுக்கு அது வழங்கப்பட்ட போதெல்லாம் இந்த அட்டாளைச்சேனை மக்கள் முஸ்லிம் காங்கிறசிற்கு முற்று முழுதாக ஆதரைவை வழங்கியவர்கள் இருப்பினும் இந் நியமனம் பற்றி எதுவும் எதிர்த்து பேசாமல் நாங்களும் அதற்கு முழு சம்மதம் வழங்கிய சம்பவங்களும் நிறையவே உண்டு.

எனவே இந்த இரண்டு ஊர் மக்களின் ஒற்றுமையையும், உறவையும், அன்றுமுதல் இன்றுவரை நாம் எல்லோரும் ஒன்றுபட்டு கட்சியின் பெயரால் காப்பாற்ற வேண்டியது எங்கள் எல்லோரின் தார்மீக கடமையும் பொறுப்பும் ஆகும் என வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் அண்மைக் காலங்களில் நடைபெற்ற கட்சியின் எந்த அரசியல் உயர் பீடங்களிலும் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலிக்கு இத் தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் எவரும் ஏகமனதாக தீர்மானிக்கவும் இல்லை இதுபற்றி கட்சி அப்போது எந்த தீர்மானமும் நிறைவேற்றவும் இல்லை என்பதையும் இத்தருணத்தில் இவ்விடயத்தில் மிகவும் நீண்ட காலமாக சம்பந்தப்பட்டு வந்தவன் என்ற வகையில் கட்சியாளர்களுக்கும், ஏனைய ஊடகவியளாலர்களுக்கும், பொதுமக்களுக்கும், மிக தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளவிரும்புவதாகவும்; அவ் அறிக்கையில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -