முஸ்லிம் சிறுவன், தந்தையால் பெளத்த மடாலயத்தில் துறவியாக்கப்பட்ட சம்பவம்

சபா ரௌஸ் கரீம்-
ன்று ஒரு சில இணையதளத்தில் அனைவரும் பௌத்த சமயத்துக்கு மதமாறிய 7 வயது முஸ்லிம் சிறுவன் என்ற கவலையான செய்தியை வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் 

ஒரு சில இஸ்லாமிய சகோதரர் அந்த சிறுவனின் தந்தைக்கு கெட்ட வார்த்தைகளால் ஏசுகின்றனர் பிழை என்றாலும் உண்மையில் யாராக இவ்வாறுதான் ஏச தோன்றும் எதற்கு காரணம் யார் என்று நாம் முதலில் உணரவேண்டும்.

என் கொள்கை சரியா உன் கொள்கை சரியா என மேடை போட்டு மாநாடுகள் நடாத்தும் ஒரு சில உலமாக்களுக்கும் இந்த செய்தி சமர்ப்பணம் இன்று பல பள்ளிவாயல்களில் சொற்பொழிவுகள் கேட்க சென்றால் ஒரு சிலர் கபுரு வணங்கி கூட்டம் அவர் பக்கம் செல்லாதீர்கள் எனவும் ஒரு சில கொள்கைவாதிகள் அது வஹாபிகளின் கொள்கை அவர்கள் பக்கம் செல்லாதீர்கள் என்ற சொற்பொழிவுகள்தான் அதிகமாக பள்ளிவாயல்களில் நடக்கின்றன

எமது உலமாக்கள் ஆயிரம் கொள்கை பிரச்சினைகளோடு  வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் மார்க்கத்தை கற்ற ஒரு சில உலமாக்களிடமே ஒற்றுமை இல்லாத போது பாமர மக்களிடம் எவ்வாறு அவர்கள் ஒற்றுமையையும் ,நல்ல குணங்களையும் எதிர்பார்ப்பது புரிந்து கொண்டு செயற்படுங்கள் 

இஸ்லாம் காட்டி தந்த அழகிய வாழ்க்கை வழி முறை , அல்லாஹ்வின் தூதர் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்களால் வாழ்ந்து காட்டப்பட்ட அழகிய முன்மாதிரிகள் ,குழந்தை வளர்ப்பு போன்ற விடயங்களை அதிகம் அதிகமாக தெளிவு படுத்துங்கள் இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்பு எப்படி ? அதனால் கிடைக்கும் நன்மை என்ன ? குழந்தை வளர்ப்புக்காக தாய் ,தந்தைக்கு மறுமையில் எவ்வாறு கூலிகள் கிடைக்கவுள்ளன என்பதை தாய் ,தந்தைகளுக்கு உலமாக்கள் பயான் நிகழ்வுகளில் சொல்லிக் கொடுப்பதனால் இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாளும் நடைபெறமால் தடுக்கலாம் 

உதாரணமாக பல விடயங்களை எடுத்து காட்டலாம் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (10202)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3358)

கொள்கை விடயங்களில் மாத்திரம் தமக்குள் அடித்து கொள்ளாமல் தற்காலத்துக்கு பொருத்தமான நல்ல சொற்பொழிவுகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து எமது சமூகத்தை அல்லாஹ்வின் உதவியால் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -