ஜனாதிபதி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி..!

ழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,

மானுட வளர்ச்சியின் ஆரம்பம் முதலே இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்த மனிதன், ஒட்டுமொத்த இயற்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய பகவான் மீது கொண்ட அபரிமித பக்தியை பரிணாம வளர்ச்சியை நோக்கிய பயணத்தின்போதும் கைவிடவில்லை. 

இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டு வரும் சூரிய வழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் இருந்து வருகின்றது. மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உணர்வுபூர்வமான உறவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வான இத்திருநாள் அம் மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நற் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் நாளாகவும் அமைகின்றது. 

உழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது. 

மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் இவ்வாறான கலாசார பண்டிகைகள் மூலம் மானிட சமுகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. 

பேண்தகு யுகத்தை நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத் திருநாள் தொன்றுதொட்டு கொண்டுவரும் இந்த வாழ்த்துச் செய்தியானது அதனை மேலும் மெருகூட்டுவதாகவே அமையும். 

இப் பின்னணியில் சகோதர தமிழ் மக்களுக்கும் நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -