GSP+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் - ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ

ரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல கடவைகளை இலங்கை அரசு கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு உரிய முடிவு இன்னமும் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் தூதுக்குழு அமைச்சர் மனோ கணேசனை அவரது அமைச்சில் சந்தித்து இன்று உரையாடியது. இது தொடர்பில் அமைச்சர் கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது, 

இப்போது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வரும் மனித உரிமை நடவடிக்கை திட்டம், ஜெனீவாவில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள், பயங்கரவாத தடை சட்ட நீக்கம், காணாமல் போனோர் அலுவலக அமைவு,மனோரி முத்தெடுவகம குழுவின் அறிக்கை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை பொறுத்தே ஜிஎஸ்பி+ வரி சலுகைகள் வழங்கப்படுவதில் இறுதி முடிவு தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் என்னுடன் தெரிவித்தார். 

இந்நாட்டில் மொழியுரிமை தொடர்பாகவும், சமூகங்களுக்கு இடையே கலந்துரையாடலை ஏற்படுத்துவது தொடர்பாகவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் தேவைப்படுவதாக நான் எடுத்து கூறினேன். இதை ஏற்றுக்கொண்ட தூதுவர், இலங்கை அரசுக்கு உதவிடும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் எடுத்துள்ளது. அமைச்சரின் வெளிப்படையான கருத்துகள் என்னை கவர்கின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றிய உதவி பட்டியலில் மொழியுரிமை, கலந்துரையாடல் ஆகிய விவகாரங்கள் இடம்பெறுவது தொடர்பில் நாம் உங்கள் அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி உரிய முடிவுகளை எடுக்கவுள்ளோம் என தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -