மஹிந்தவின் தவறுக்கு நல்லாட்சியை தூசித்து எந்தப் பயனுமில்லை - இம்ரான் MP

ஹிந்தவின் ஆட்சியில் விட்ட தவறுக்கு நல்லாட்சியை தூசிப்பதால் எந்த பயனுமில்லை என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

தற்போது என்னிடம் பலரும் வில்பத்து பற்றி கேட்ட்கின்றனர். நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.காடுகளை யார் அழித்தாலும் அது குற்றமே .இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அங்குள்ள பூர்வீக குடிகளை துரத்தியடித்துவிட்டு சிங்கம் புலிகளை குடியமர்த்த முடியாது.

தற்போது சர்ச்சைகுரிய பகுதியாக பேசப்படும் வில்பத்து எல்லைபகுதியில் பல தசாப்தங்களாக மக்கள் வாழ்ந்ததுக்கான ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் இதில் சில பகுதிகள் வனப்பகுதிக்கு உட்பட்டது என வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இப்பிரட்சினை எங்கிருந்து ஆரம்பித்தது என முதலில் ஆராய வேண்டும்.

குறிப்பிட்ட வர்த்தமானி கடந்த அரசின் காலத்திலேயே வெளியிடப்பட்டது. இது வெளியிடப்பட்ட போது அப்போதிருந்த எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அரசின் பக்கமே இருந்தனர். யாரும் இதை தடுக்கவோ இதற்கெதிராக குரல் எழுப்பவோ இல்லை. இன்று நல்லாட்சியிடம் முஸ்லிம்களுக்கு ஆயுதம் கேட்டவர்களும் முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் அன்றே இதை பேசியிருக்க வேண்டும். அன்று மஹிந்தவின் ஆட்சியில் விட்ட தவறுக்கு நல்லாட்சியை தூசிப்பதால் எந்த பயனுமில்லை. 

அந்தத்தவறை சரிசெய்யும் வாய்ப்பு நல்லாட்சியில் நிறையவே உள்ளது.

அத்துடன் இது ஒரு பகுதி மக்களின் உரிமை பிரட்சினை. இதில் யாரும் அரசியல் லாபம் தேட முயற்சிக்க கூடாது. தேர்தல் ஒன்று நெருங்கி வரும் போதே இந்த பிரட்சினை எழுப்பப்படுவது பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. கடந்த பொது தேர்தலின் போது பூதாகாரமாக்கப்பட்ட இப்பிரட்சினை உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கும் இத்தருணத்தில் மீண்டும் பேசப்படுகிறது.

நல்லாட்சியில் எமக்கு எதையும் நேரடியாக ஜனாதிபதி பிரதமரிடம் பேச கூடிய சுதந்திரம் தரப்பட்டுள்ளது. ஆகவே யார் எமது சமூகத்தின் தேசிய தலைவர் எனும் போட்டியை ஓரம்கட்டிவிட்டு அனைத்து முஸ்லிம் பிரதிதிகளும் இணைந்து இப்பிரட்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுகொடுப்போம். அவ்வாறில்லாமல் எமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை மேற்கொள்ள முயற்சித்தால் நாம் சமூகத்தின் துரோகிகளாக வரலாற்றில் பேசப்படுவோம் .

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அபிவிருத்தி யுகம் ஒன்றை நோக்கி நாடு பயனித்துக் கொன்டிருக்கிறது. உண்மையான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்கள் நாட்டில் உருவாக்கபட்டு வருகின்றன. இலங்கையில் பாரியளவிலான முதலீடுகள் இடபெற்றுவருகின்றன கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ,டயர் ,கையுறை தொழிற்சாலைகள் கடந்த தினங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைவிட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -