SLMCயின் உயர்பீடம் இன்று கூடுகிறது - தேசியப்பட்டியல் இல்லை என்றால் அட்டாளைச்சேனையில் பலர் இராஜினாமா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் இன்றைய தினம் கூட உள்ளது.கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை பீடமான தாருஸலாமில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. நீண்ட காலமாக கட்சியில் நிலவி வந்த முரண்பாடுகள் இன்றைய கூட்டத்தில் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் அடுத்த பேராளார் மாநாடு எங்கு எப்போது நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது.

கட்சியின் யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்து, பழைய யாப்பினையே மீளவும் அமுல்படுத்தல், கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தல், தற்போது தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எச். சல்மானை நீக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் ஹசன் அலி பங்கேற்றிருக்கவில்லை எனவும், இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேற்று முன் தினம் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலினால் அட்டாளைச்சேனைக்கு தரப்படவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பிலான கூட்டத்தின் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்காவிடில் அட்டாளைச்சேனையில் உள்ள 06 உயர்பீட உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. செய்திக்கு..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -