SLMDI UK ஐக்கிய இராச்சியத்தின் Hon. Stephen Timms MP உடன் இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியது.



SLMDI UK அமைப்பானது இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்துள்ளது.அதன் முதல் கட்டமாக 17.01.2017 செவ்வாய்க்கிழமை இன்று பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் STEPHEN TIMMS MP உடன் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் SLMDI UK இன் தலைவர் M L நஷீர் தலைமையில் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் இலங்கையில் அண்மைக்காலமாக குறிப்பாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கு இனவாதிகளால் இடம்பெற்று வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்டீபன் டிம்ஸ் MP இடம் சுட்டிக்காட்டியதோடு இவ்வினவாத நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் இது வரை மேட்கொள்ளவில்லை என்பதையும் எடுத்து கூறப்பட்டது.

இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஸ்டீபன் டிம்ஸ் MP இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சர்வதேச சமுகம் கண்காணித்து வருவதாகவும் அந்நிலமை மிகவும் கவலை தருவதாகவும் கூறிய அவர் இது தொடர்பில் தன்னால் மேட்கொள்ளக்கூடிய சகல அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்த அவர் பிரித்தானியாவில் இலங்கை முஸ்லிம்களின் நலனுக்காக SLMDI UK செய்ய இருக்கின்ற இராஜதந்திர அழுத்தங்கள் அனைத்துக்கும் தான் முழு ஆதரவையும் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் முஸ்லிம்களது பூர்வீக நிலங்களை இலங்கை அரசாங்கம் பல்வேறு காரணங்களை காட்டி சுவீகரித்து வருகின்ற விடயமும் ஸ்டீபன் டிமம்ஸ் MP இடம் சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக வில்பத்து விவகாரத்தில் முஸ்லிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் கையளிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் மிக விரைவாக தான் பொதுநலவாய அலுவலத்தில் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரதிநிதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஸ்டீபன் ஸ்டிம்ஸ் MP தெரிவித்தார்.

இன்றய தினம் ஐக்கிய இராச்சிய பிரதமரின் BRI EXIT தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற்ற போதிலும் அதன் மத்தியில் இலங்கையின் முஸ்லிம்களது பிரச்சனைகளை நேரம் ஒதுக்கி கலந்துரையாடிய ஸ்டீபன் ஸ்டிம்ஸ் MPக்கு SLMDI UK
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -