SLMDI UK கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் ஹென்றி ஸ்மிதுடன் சந்திப்பு.!

SLMDI UK அமைப்பானது இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக கடந்த 17.01.2017 அன்று பிரித்தானியல நாடாளுமன்றத்தில் Stephen Timms MP உடன் சந்திப்பு இடம்பெற்றது.

அதன் இரண்டாம் கட்டமாக 27.01.2017 வெள்ளிக்கிழமை நேற்று ஹென்றி ஸ்மித் MP இன் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் SLMDI UK இன் தலைவர் M L நஷீர் அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் A C M அசாம் உறுப்பினர்களான H ஜாபீர், A L M மபாஸ் மற்றும் அன்வர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது இலங்கையின் சமகால நிலைமை குறித்து ஆராயப்பட்டதோடு குறிப்பாக இலங்கையின் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் நலன்கள் குறித்தும் முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகள் குறித்தும் ஹென்றி ஸ்மித் MPயிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த ஹென்றி ஸ்மித் MP ஐக்கிய இராச்சியத்தின் foreign & Commenwealth அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் Alok sharma அவர்களை சந்திப்பதட்கான நேரம் ஒன்றினை ஒழுங்கு செய்து தருவதாகவும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பினை தொடர்ந்து எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை SLMDI UK இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதட்கான அழைப்பும் ஹென்றி ஸ்மித் MPக்கு வழங்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -