இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும்; (ஞாயிற்றுக்கிழமை) 19ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ. நவ்பர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் அனைத்து பீடங்களிலும் இருந்து 935 பட்டதாரிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மட் இஸ்ஹாக் பட்டங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளதாகவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.