13,000க்கும் அதிகமானோர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்த சிரியா அரசு

சிரியாவில் 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சங்களில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் மனித உரிமைகளுக்கான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கையில், சிரியாவின் டமஸ்கஸ் அருகிலுள்ள பிரபலமான ஸய்த்நாயா சிறையில் மாத் திரம் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்கும் 13,000க்கும் அதிகமானோர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Human Slaughter house: Mass hanging and extermination at Saydnaya prison” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள மேற்குறித்த அறிக்கையில் சிறைக்காவ லர்கள், அரசியல் கைதிகள் மற்றும் நீதி பதிகள் உள்ளிட்ட நேரடி சாட்சிகள் 84 பேர் வழங்கிய தகவல்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி 2011 இற்கும் 2015 இற்கும் இடையில் வாரத்துக்குக் குறைந்தபட்சம் 50 சடலங்கள் அளவில் சிறைச்சாலையிலிருந்து வெளியேற்றப் பட்டு வருதாகவும் நள்ளிரவுக்குள் இரகசியமாக தூக்கிலேற்றப்படும் இந்தக் கைதிகள் தாம் எப்போது, எதற்காகத் தூக்கிலிடப்படுகிறோம் என்பதையும் அறியாத நிலையிலேயே கொல்லப்படு வதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. பட்டினி போடல், எலும்பு முறிவுகள் எனப் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவர்களில் அநேகர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பஷர் அல் அஸத்துக்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கப்பட்ட பொது மக்களேயாவர். அறை இலக்கங்களைக் குறிப்பிட்டு ‘இந்த அறையில் இன்று எத்தனை சாவுகள்?’ என தம்மிடம் நாளாந்தம் கேட்டுக் கொண்டு சிறைக் காவலாளிகள் வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் சிறைக் கைதி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அறிக்கைகளின்படி சிரிய யுத்தத்தில் இதுவரைக்கும் 400,000 க்கும் அதிகமான தொகையினர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -