குவைத்திலிருந்து 14 வருடத்துக்குப் பின் வீடு வந்த ஓட்டமாவடி ஹயருன் நிஷா..!

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி-3ம் வாட் ஹூசைனியா வீதியைச் சேர்ந்த முஹம்மது அலியார் ஹயருன் நிஷா எனும் யுவதி கடந்த பதின்னான்கு வருடத்துக்கு முன்னர் குவைத் நாட்டுக்கு வீட்டு வேளைக்காகா பணிப்பெண்னாக சென்றுள்ளார். சென்ற நாளில் இருந்து தனது குடும்பத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதவராக இருந்துள்ளார்.

குறித்த யுவதி வேளை செய்யும் வீட்டுக்கு அருகில் இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு பெண்மணி வேளை செய்து வந்துள்ளார். இப் பெண்ணை அதிஸ்டவசமாக சந்தித்த ஹயருன் நிஷா நான் இலங்கையில் இருந்து இவ் வீட்டுக்கு வேளைக்கு வந்து பதின்நான்கு வருடாமாகிறது நான் வேளை செய்யும் எஜமானி என்னை வீட்டுக் காவலிலே வைத்து வருகின்றார் என்னை எங்கேயும் அழைத்துச் செல்வதில்லை யாரையும் சந்திக்க விடுவதும் இல்லை என்று கூறியுள்ளார்.

என்னைப் பற்றிய தகவல்கள்களை என்னுடைய வீட்டுக்கு அறியப்படுத்தவும் என்று ஹயருன் நிஷா கூற அந்த தகவல்கள்களை குறித்த யுவதி ஹயருன் நிஷாவின் வீட்டுக்கு அறியப்படுத்தயுள்ளர்.

அதனைத் தொடர்ந்து ஹயருன் நிஷாவின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சியால் அவரை குவைத் தூதரகத்தின் உதவியோடு பாதுகாப்பான முறையில் இலங்கைக்கு வரவழைத்துள்ளனர்.

இளவயதில் தந்தையையும் தாயையும் இழந்த ஹயருன் நிஷா தப்போது அவருடைய குடும்பத்தோடு சேர்ந்துள்ளார். இவ்வளவு காலமும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்த ஹயருன் நிஷாவுக்கு குவைத் தூதரகத்தின் உதவியோடு 2520000/= பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -