தலவாக்கலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு - 15 ஏக்கர் எரிந்து நாசம்

க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா தோட்டத்துக்கு அண்மித்த பாதுகாப்பு வனப்பகுதியில் 17.02.2017 அன்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீயினால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட காட்டுப்பகுதியில் 15 ஏக்கர் அளவு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தீ காரணமாக இப்பிரதேசத்தில் உள்ள அரிய வகை மரங்கள், உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இக்காட்டுப்பகுதியில் இருந்தே நானுஓயா தோட்ட மக்களுக்கு குடிநீரினையும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொடர்ச்சியாக மலையகத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -