அஷ்ரப் ஏ சமத்-
அன்மையில் 19 வயதுக்குற்பட்ட முக்கோன விளையாட்டுப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா போ்ட்டியில் இலங்ககைக்கு வெற்றியீட்டுவதற்கு காரணமாயிருந்த கிறிக்கட் வீரா் அம்பலாங்கொடையைச் சோ்ந்த நிபுன் ரசிக்கவையும் அவரது குடும்பத்தினையும் அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று(21) அமைச்சுக்கு அழைத்து மொரட்டுவையில் அங்குலானையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொடா்மாடி வீடமைப்புத் திட்டத்தில் 45 இலட்சம் ருபா பெறுமதியான வீடொன்றை நிபுன் ரசிக்கவுக்கு இலவசமாக கையளித்தாாா்.
அத்துடன் அம்பலாங்கொடையில் அவரது பெற்றோா்களினால் ஈட்டில் உள்ள காணியையும் மீளப் பெறுவதற்காக அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் 5 இலட்சம் ருபா வழங்கப்பட்டது. இக் காணியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் காலி மாவட்ட முகாமையளரிடம் 6 மாத காலத்திற்குள் வீடொன்றை நிர்மாணிக்கவும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்தாா்.
இவ் வீரா் அம்பலாங்கொடையில் இருந்து கிறிக்கட் பயிற்சிக்காக நாளாந்தம் கொழும்புக்கு பிராயணம் செய்வதாகவும், மீண்டும் அம்பலாங்கொட ஜீ.பி.எஸ் குலரத்தின வித்தியாலயத்தல் உயா்தரம் கற்பதற்கு பாடசாலை செல்வதாகவும் குடும்பத்தின் வறுமை காரணமாகவும் இவ் வீரரின் தாய் மத்திய கிழக்கில் சென்றுள்ளதாகவும் தாம் வாழும் குடிசை காணியும் குத்தகையில் உள்ளதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இவர் கிறிக்கட் விளையாட்டுப்போட்டியில் பாடசாலை மட்டத்தில் இருந்து பந்து வீசுவதில் மிகத் திறமை காட்டி தற்போது இலங்கை கிறிக்கட் அணியின் 19 வயது குழுவில் இடம் பெற்றுள்ளாா்.
இவர் கடந்த மாதம் நடைபெற்ற முக்கோண கிறிக்கட் தொடரில் சிறந்த வீரா் Man of the Mach அத்துடன் சிறந்த பந்து வீச்சாளா் என்ற வெற்றிகளையும் ஈட்டினாா். அத்துடன் இவா் தேசிய அணியில் எதிா்காலத்தில் வருவதற்காக தான் முயற்சிப்பதாகவும் அதற்காக கொழும்பில் தங்கி நின்று இலங்கை கிறிக்கட் குழுவில் பயிற்சி அளிப்பதற்கும் அமைச்சா் மொரட்டுவையில் வழங்கிய வீடு தனக்கு பெரிதும் நன்மைபயக்குகின்றது. ஏழைகளைத் தேடி உற்சாகப்படுத்தும் அமைச்சா் சஜித் பிரேமதாசவுக்கு நன்றியைத் தெரிவித்தாா்.
இவ்வைபவத்தில் அமைச்சின் செயலளாா் டப்ளியு.கே.கே. என் அத்துக்கோரல, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.எல்.பலன்சூரிய, நகர குடியிருப்பு அதிகார சபையின் தலைவா் ரன்ஜித் காந்த நகவல ஆகியோறும் கலந்து கொண்டனா்.