2016 ஆம் ஆண்டுக்கான கொடகே விருது வழங்கும் விழா..!

கொடகே 2016 ஆண்டுக்கான ஆக்க இலக்கிய கையழுத்துப்பிரதி போட்டி விருது வழங்கும் விழா எதிர்வரும் 22.02.2017 அன்று பி.ப.3.30 மணிக்கு கொழும்பு-7 தேசிய நூலக சேவை ஆவணவாக்கல் சபை கேட்போர்க் கூடத்தில் நடைபெறும். இவ்விழாவில் சிங்கள- தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகளுக்கு விருதுகள் வழங்கப்படும், இவ்விழாவில் சிங்கள மொழியில் பேராசிரியர் பீ.ஏ.டெனிசன் பெரேரா அவர்களும், தமிழில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களும் உரைகள் நிகழ்த்துவார்கள். சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு கையெழுத்துப் பிரதிக்கான விருதினை தனது ””மழை நின்ற பொழுதும்.... “ எனும் பிரதிக்கு காத்தநகர் முகைதீன் சாலியும், சிறந்த சிறுகதைத் தொகுப்பு கையெழுத்துப் பிரதிக்கான விருதினை தனது ” ”அமேசன் காட்டில் அழகன் பூசாரி“ எனும் பிரதிக்கு அ.இருதயநாதன் பெற்றுக் கொள்வார்கள்.
மேமன்கவி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -